2020-யின் Top ட்வீட்: ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி!

தளபதி செல்ஃபி, கோலி ட்வீட், தல தோனி நன்றி ட்வீட் என இந்த ஆண்டின் அதிகமாக மறு ட்வீட் செய்யபட்ட ட்விட்டர் பதிவுகள் இதோ..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2020, 12:26 PM IST
2020-யின் Top ட்வீட்: ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்யின் செல்ஃபி! title=

தளபதி செல்ஃபி, கோலி ட்வீட், தல தோனி நன்றி ட்வீட் என இந்த ஆண்டின் அதிகமாக மறு ட்வீட் செய்யபட்ட ட்விட்டர் பதிவுகள் இதோ..!

இந்த ஆண்டு ட்விட்டர் தளத்தில் இந்தியர்கள் அதிகம் மறு ட்வீட் செய்து பேசிய நிகழ்வுகளைப் பற்றி ட்விட்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Covid-19, சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ஹத்ராஸ் கற்பழிப்பு என பல நாட்டின் முக்கியமான தலைப்புகளில் அதிகம் விவாதங்கள் பதிவாகியிருந்தது. 

இதைதவிர அதிகம் பேசப்பட்ட சில முக்கியமான் தருணங்களைப் பற்றியும், ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட மீம், ஈமோஜி மற்றும் த்ரோபேக் (Throwback) உரையாடல்களையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரையிலான சிறந்த ட்வீட்களுக்கான தகவல்களைச் சேகரித்து பட்டியலிட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. 

No description available.

ALSO READ | See Pic's: இணையத்தை கலக்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் லேடஸ்ட் புகைப்படம்!

2020 ஆண்டில் டாப் ட்வீட்களின் பட்டியல் இதோ: 

2020 ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் – கோலிவுட் நடிகர் விஜய் பிப்ரவரி 2020 இல் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தது. 

மிகவும் விரும்பப்பட்ட ட்வீட் – அனுஷ்கா ஷர்மாவின் கர்ப்பம் குறித்து விராட் கோஹ்லி அறிவித்தது.

மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட் – அமிதாப் பச்சனின் கோவிட் -19 விழிப்புணர்வு ட்வீட்.

ALSO READ | அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க பிக்பாஸ் வீடுக்குள் வரும் பிரபல Vj..!

டாப் அரசியல் ட்வீட்

அரசியல், விளையாட்டு மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகளிலும் சிறந்த ட்வீட்களை ட்விட்டர் அறிவித்துள்ளது. அரசியல் பிரிவில் மிகவும் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால், அது Covid 19 தொற்றின் போது விளக்குகள் ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்ட ட்வீட் தான். 

டாப் பிசினஸ் ட்வீட்

வணிக பிரிவில், கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதாக ரத்தன் டாடாவின் உறுதிமொழி மிகவும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும்.

டாப் ஸ்போர்ட்ஸ் ட்வீட்

விளையாட்டு பிரிவில், பிரதமர் மோடியின் கடிதத்திற்கான எம்.எஸ்.தோனியின் நன்றி தெரிவிக்கும் ட்வீட் தான் மிகவும் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும். 

ALSO READ | உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் நடிகை அஞ்சலியின் வீடியோ லீக்..!

டாப் ஹேஷ்டேக்குகள்

மிகவும் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகளில், IPL 2020, Whistle Podu மற்றும் Team India முதலியவை முதலிடத்தில் இருந்தன. இந்த ஆண்டு டிவி மற்றும் திரைப்படங்களைப் பற்றி ட்விட்டர் நிமிடத்திற்கு 7,000 ட்வீட்களை ட்விட்டர் பதிவு செய்தது. 

டாப் திரைப்பட ட்வீட்கள்

இந்த ஆண்டு ட்விட்டரில் தில் பெச்சாரா, சூரரை போற்று மற்றும் சரிலேரு நீக்கெவ்வரு போன்ற படங்களைப் பற்றி இந்தியர்கள் அதிகம் பேசியுள்ளனர்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News