சந்திர கிரகணம் நாளை விண்ணில் தென்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும். சந்திர கிரகணம் நாளை விண்ணில் தென்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும்.
இந்த சந்திர கிரகணம் 1 மணி 43 நிமிடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும். தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். மேலும் சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோயிலில் 11 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.
பொதுவாக சந்திரகிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, சந்திரனை பார்க்கக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்த சந்திரகிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பண்ணக்கூடாதது எவை!
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.
கிரகணம் முடியும்வரை உணவு சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், வீட்டில் சமையல் செய்யாமலும் இருக்க வேண்டும்.
கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் நகம் வெட்டக்கூடாது, காய்கறி நறுக்ககூடாது மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.