தக்காளி இல்லாமல் சமைக்க கூடிய உணவு பொருட்கள்-விலை ஏற்றத்தை சமாளிக்க எளிய வழி!

தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தக்காளி விலையின் கடும் ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கே தக்காளி இல்லாமல் செய்யக்கூடிய சில உணவுகளின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை மாறும் வரை இதை சமைத்து சுவைத்து மகிழுங்கள்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2023, 11:47 AM IST
  • தக்காளி விலை ஏற்றத்தால் பொதுமக்கள் திணறல்.
  • இதை சமாளிப்பது எப்படி?
  • தக்காளி சேர்க்காமல் சில உணவுகளை சமைக்கலாம்.
தக்காளி இல்லாமல் சமைக்க கூடிய உணவு பொருட்கள்-விலை ஏற்றத்தை சமாளிக்க எளிய வழி! title=

நாம் அன்றாடம் வீட்டில் சமைக்க உபயோகிக்கும் பொருட்களுள் ஒன்று, தக்காளி. இதன் விலை பெருமளவில் உயர்ந்து நம் விட்டு செலவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  கிலோவுக்கு 20-30 ரூபாயாக இருந்த தக்காளி தற்போது, 110-160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இதன் விலை சீக்கிரத்தில் குறையாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தக்காளியின் தட்டுப்பாட்டை சமாளிக்க அதை நம் உணவில் சேர்க்காமல் சில நாட்கள் சமாளிக்கலாம். தக்காளி இல்லாமல் பல உணவுகளையும் செய்யலாம். 

ரசம்:

“என்னங்க..ரசத்தில் தக்காளி தானே முக்கியம்..” என்ற உங்களின் மைண்ட்-வாய்ஸை நன்றாகவே கேட்க முடிகிறது. நெடு நாட்களாக நாம் ரசத்தில் கண்டிப்பாக தக்காளி போட வேண்டும் என்று நினைத்து கொண்டுள்ளோம். அதுதான் இல்லை. தக்காளி இல்லாமலும் அருமையான ரசத்தை வைத்து சுவைக்கலாம். நீங்கள் வழக்கமாக செய்யும் ரசத்தில் தக்காளியை பிழிந்து விடாமல் புளியை மட்டும் கொஞ்சம் அதிகமாக உபயோகியுங்கள். இது உங்கள் ரசத்தில் தக்காளி இல்லாத உணர்வை கொடுக்காது. 

மேலும் படிக்க | திருமண உறவில் பிரச்னையே வராது... ஆண்கள் இதையெல்லாம் செய்தால் மட்டும் போதும்!

மோர் குழம்பு: 

வீட்டில் தயிர் இருந்தால் அதை வைத்து பல வகை சுவயான உணவுகளை தயாரிக்கலாம். அதில் அனைவராலும் விரும்பி ருசிக்கப்படுவது, மோர் குழம்பு. இதற்கு தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, கடுகு, கொஞ்சமாக எண்ணெய், தண்ணீர் தேவையான அளவு இருந்தாலே போதும். இதற்கு தக்காளியை உபயோகப்படுத்த தேவையே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரியான குழம்புகளுள் ஒன்று இது. 

தேங்காய் சாதம்:

பொதுவாக, குழம்பு அல்லாத சாப்பாட்டு வகை உணவுகளை செய்வதற்கு தக்காளி அதிகமாக பயன்படாது. அதிலும் தேங்காய் சாதத்திற்கூ தக்காளி போடலாமா வேண்டாமா என்பது நம் விருப்பம்தான். இதற்கு தேவையானது எல்லாம், துருவிய தேங்காய், வடித்த சாதம், உப்பு, கரிவேப்பிலை மட்டுமே. வதக்கி எடுத்த தேங்காய் துருவலில் வெள்ள சாதத்தை உப்பு போட்டு கிளறி இறக்கினால் தேங்காய் சாதம் ரெடி. இதற்கு எதற்கு தக்காளி? 

புளியோதரை..

தமிழகத்தின் பல கோடி மக்களில் சில கோடிபேர் புளியோதரை பிரியராக இருப்பர். ‘Fridge கண்டுப்பிடிக்காத காலத்திலேயே நாங்கள் எல்லாம் புளியோதரையை 5 நாட்கள் வைத்து சாப்பிட்டவர்கள்..” என்ற விவேக்கின் டைலாக் ஞாபகம் இருக்கிறதா? புளியோதரையின் குணாதிசியமும் அதுதான். 3 நாட்கள் ஆனாலும் கிளறிய புளியோதரை கெடாமல் இருக்கும். பெருமாள் கோவில்களில் மிகவும் விஷேஷமாக வழங்கப்படும் இந்த புளியோதரை, வெகு தூர பயணங்களுக்கும் நமக்கு துணையாக வருகிறது. இதை செய்ய தக்காளி தேவையே இல்லை. கொஞ்சம் புளி, எண்ணெய், தேவைப்பட்டால் வேர்கடலை, தண்ணீர், உப்பு ஆகியவை இருந்தால் போதும். உடலுக்கும் நல்லது, தக்காளியும் தேவையில்லை. 

பன்னீர் பட்டர் மசாலா..

இந்த பெயரை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? அப்படிப்பட்ட ஒரு வட இந்திய டிஷ்தான் இந்த பன்னீர் பட்டர் மசாலா. நான் என்ற சப்பாத்தி வகைக்கும் அசல் சப்பாத்திக்கும் ஏற்ற குழம்பு இது. இதில் பெரும்பாலானோர் தக்காளியை உபயோகிப்பதில்லை. இந்த டிஷ்ஷில் தக்காளி புளிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும். இதற்கு பதிலாக கொஞ்சம் சாஸ் உபயோகிக்கலாம். அப்படி இல்லை என்றால் உப்பை கொஞ்சம் குறத்துவிட்டு சால்டட் பட்டரை உபயோகிக்கலாம். 

காரக்குழம்பு..

புளிப்பும் காரமும் நிறைந்து பல வகையான சுவையை தருவதுதான் காரக்குழம்பு. இதில் புளிப்பிற்காக கொஞ்சம் புளிக்கரைசலுடன் தக்காளியும் சேர்க்கப்படும். தக்காளி இல்லாமலும் இந்த குழம்பை வைக்கலாம். தக்காளி இல்லாமல் புளிப்பு கொஞ்சமாகத்தான் குறைவாக இருக்கும். இதை சரிசெய்ய மிளகாய்த்தூளை குறைவாக உபயோகப்படுத்துங்கள். அப்படி உங்களுக்கு புளிப்பு இல்லாமல் குழம்பை சுவைக்க முடியாது என்றால், புளிக்கூழ் (tamarind pulp) என்ற ஒன்று கடைகளில் விற்கின்றன. அதை குறைவான அளவு உங்கள் காரக்குழம்பில் உபயோகியுங்கள். 

மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News