உலக கடல் தினம்! கடல் மாசுபடுவதை தடுப்போம்!

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கிறது. பிரம்மிக்க வைக்கும் கடல் பயணம், எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம் இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை, உலக கடல் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ம் தேதி கொண்டாடி மகிழ்கிறோம். 

Last Updated : Jun 9, 2018, 08:41 AM IST
உலக கடல் தினம்! கடல் மாசுபடுவதை தடுப்போம்!  title=

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கிறது. பிரம்மிக்க வைக்கும் கடல் பயணம், எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம் இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை, உலக கடல் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ம் தேதி கொண்டாடி மகிழ்கிறோம். 

கடல் தினம்

1990-களில் கடல்களிலுள்ள ஏராளமான வளங்கள் ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு முதலைகளின் கண்ணை உறுத்தியது.முன்பின் பார்த்திராத அந்நாடுகளின் பிரமாண்டமான கப்பல்களை கண்டதும் வெகுஜன மக்கள் மிரண்டனர். பிரமாண்ட கப்பல்களை விட்டு மிரட்டி. கடல் வளங்களை சூறையாடினர். ஆனால் உலகின் பலதரப்பட்ட நாடுகளிலிருந்து வந்த கண்டன குரல்கள் ஒங்கி ஒலித்தன. 

பொதுசொத்து என்ற கருத்து முன்வைக்கப்பட்டு 1992-ஜூன் 8 முதல் புவி மாநாட்டில் உலக கடல் நாள் கொண்டாட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்து. ஆனால் 2009-ஜூன் 8-லிருந்துதான் உலக கடல் தினம் கொண்டாட ஐ.,நா. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  

கடலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரங்களை குறையாமல் அளித்து வருகிறது. பல்லுயிர்களை பெருக்கெடுத்து கொடுக்கும் இயற்கை அன்னையாக விளங்கி கொண்டிருக்கிறது கடல். பெருமளவு மருந்துகள், உணவுகளை வாரி வழங்கி வருகிறது. முக்கியமாக நமக்கு மரங்களிலிருந்து கிடைப்பதைவிட கடலிலிருந்து கிடைக்கும் பிராண வாயுவே அதிகம். பல மீனவ குடும்பங்களின் வாழ்வாதரமாகவும், கடல் விளங்குகின்றது.
 
இத்தகைய பெருமை மிக்க கடலினை, பெட்ரோலியம், உரம், சாயம், தோல், தொழிற்சாலைகளின் கழிவுநீர் மாசு போன்றவை மாசுபடுத்தி வருகின்றது. கடலினுள், அளவுக்கதிகமான மீன்கள் பிடிக்கப்படுவதாலும், ஓயாமல் நிகழும் கப்பல் போக்குவரத்தாலும், பிளாஸ்டிக் பொருட்களை வீசியெறிவதாலும் கடலின் சுத்தம் பறிபோய் கொண்டிருக்கிறது.

இதன் காரணங்களால் கடலை மாசுபடுத்தும் உலக நாடுகளில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளதாம். எனவே, வரும் வருடங்களில் மீன் இனமே குறையும் வாய்ப்பும் உள்ளதவும் தகவல் தெரிவிக்கின்றனர்.    

Trending News