ஸ்ரீவரலட்சுமி விரத கொழுக்கட்டை... எளிதாய் செய்ய சில டிப்ஸ்

ஸ்ரீவரலட்சுமி விரத பூஜை அன்று அனைவரது வீட்டிலும் தவறாமல் செய்யப்படும் கொழுக்கட்டை வீட்டில் எளிமையாக செய்யலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 07:46 PM IST
  • அம்மனின் மனம் குளிர நைவேத்தியம் செய்து அவளது ஆசியை பெறுங்கள்.
  • தேங்காயைத் துருவல் வெல்லம் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து சிறிது கிளரவும்.
  • விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.
ஸ்ரீவரலட்சுமி விரத கொழுக்கட்டை... எளிதாய் செய்ய சில டிப்ஸ் title=

ஸ்ரீவரலட்சுமி விரத பூஜைக்கு பூரணம் கொழுக்கட்டை என்பதே பிரதான நெய்வேத்தியம். அதனால் வரலட்சுமி விரத பூஜை அன்று அனைவரது வீட்டிலும் தவறாமல் செய்யப்படும் கொழுக்கட்டை வீட்டில் எளிமையாக செய்யலாம். சிலருக்கு மேல் மாவு சரியாக வராமல், கொழுக்கட்டை செய்யும் விரிசல் விழும் அல்லது உடைந்து போகும். பூரண கொழுக்கட்டை சில நேரங்களில் மாவு இறுகி கல் போல் ஆகிவிடும். அப்படி மாறாமல் பூ போல், அல்லாமல் எளிதாய் கொழுக்கட்டை செய்யலாம்.  

கொழுக்கட்டை மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - 1கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

சிறிதளவு உப்பு

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடாக்கவும். நன்றாக கொதிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், நன்றாக சுட வேண்டும். அதில் 1 ஸ்பூன் நல்லெண்ய் விட்டு , உப்பு சேர்த்து பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். மாவு கிளற தண்ணீர் அதிக அளவு கொதிக்க கூடாது.  தண்ணீர் அதிகம் வற்றாமல் கொஞ்சம் தண்ணீர் பதம் இருக்கும் போதே அடுப்பை அணைத்துவிடுங்கள். இல்லையெனில் வெந்ததும் மாவு மிகவும்  இறுகிவிடும். அதன் பின் சூடு தணிந்ததும் மீண்டும் கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது வெதுவெதுபான தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு சிறிது நெகிழ இருந்தால், கொழுக்கட்டை பூ போல வரும். 

மேலும் படிக்க | ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 'முக்கிய' பொருட்கள்

பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1 கப்

தேங்காய் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தேங்காயைத் துருவல் வெல்லம்  இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து சிறிது கிளரவும். இப்போது இனிப்புக்கு பூரணம் கலவை தயார். விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.

செய்முறை:

பிசைந்து தயார் செய்துள்ள கொழுக்கட்டை மாவை, உருண்டைகளாக உருட்டி, நடுவில் குழிபோல செய்து அதனுள் பூரணத்தை வைக்க வேண்டும்.  இப்படி தேவையான உருண்டைகளை செய்து பூரணத்தை வைத்து கொழுக்கட்டை தயார் செய்யவும். பின்னர் செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வேக வைத்தால்  சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை தயார். அம்மனின் மனம் குளிர நைவேத்தியம் செய்து அவளது ஆசியை பெறுங்கள்.  

மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News