பல இயற்கை மூலிகைகள் நோய்த்தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அது மட்டுமன்றி, ஒரு சில இயற்கை மூலிகைகளால் உடல் ஆரோக்கியமும் மேம்படும். உடலில், சரியான செரிமான ஆரோக்கியம் இருந்தாலே, பல பிரச்சனைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செரிமான கோளாறுகளை தீர்க்கவே சில மூலிகைகள் பயன்படும். இயற்கை மூலிகைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடல் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. அது மட்டுமன்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன. சளி-இருமல் மட்டுமன்றி, இதய ஆரோக்கியத்தையும் நுரையீரல் சுத்திகரிக்கும் வேலைகளையும் இயற்கை மூலிகைகள் பார்த்துக்கொள்கின்றன. அதற்கு என்னென்ன மூலிகைகள் பயன்படுகின்னறன தெரியுமா?
துளசி:
துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது பிடிவாதமான இருமல் உட்பட சுவாச நோய் பாதிப்புகள் ஆகியவையும் சரி ஆகும். இது, இதய நோய் தொடர்பான நோய்களுக்கு எதிராகவும் போராடுகிறது. இது சளியை அகற்றவும் தொண்டை புண்ணை ஆற்றவும் உதவுகிறது. மேலும், இது நோயெதிர்ப்பு சக்தியை ஆதரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் படிக்க | மனதளவில் பலமாக இருப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை பின்பற்றுங்கள்!
திரி வேம்பு :
மிளகு, இஞ்சி, உள்ளிட்ட பல்வேறு இயற்கை சளி எதிர்ப்பு காரணிகளை அடக்கிய மூலிகைதான், திரிவேம்பு. இதை கசாயமாக குடிக்கலாம். அல்லது தேன் கலந்தும் இதை அப்படியே சாப்பிடலாம். இதை சாப்பிடுவதனால் சளி-இருமல் பிரச்ச்னைகள் சரியாகும். இதனால் உடலில் மெட்டபாலிச சத்துக்களும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமதுரம்:
அதிமதுரத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் அதீத நற்பண்புகள் உள்ளன, இது தொண்டை எரிச்சல் மற்றும் இருமலைக் குறைக்கும். இது சுவாச கோளாறினை சரி செய்து குடல் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தையும் ஆதரிக்கிறது.
கந்தகாரி:
கந்தகாரி மூலிகையினால் சளி மற்றும் இருமல் பிரச்சனை சரியாகும். இதனால் குடல் வீக்கம் சரியாகும். நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்றினை சரி செய்ய உதவும். மேலும், ஒட்டுமொத்த சுவாச கோளாறுகளையும் இந்த மூலிகை சரிசெய்ய உதவும்.
ஆடாதொடை இலை:
இருமலை குறைப்பதிலும், சளி ஏற்படாமல் தடுப்பதற்கும் ஆடாதொடை இலை உதவும். இதை சமைத்தும் சாப்பிடலாம் அல்லது கசாயமாகவும் குடிக்கலாம். சளிபிடித்திருக்கும் சமயத்தில் இதை சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.
புதினா:
புதினா ஒரு ஆண்டிஸ்பாஸ்மோடிக் ஆற்றலாக செயல்படுகிறது. இது இருமல் மற்றும் நெஞ்சரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, மேலும், தலைவலியை நீக்கி மன நலனில் விழிப்புணர்வினை அதிகரிக்கிறது.
மஞ்சள்:
மஞ்சளில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மஞ்சளில் இருக்கும் பண்புகள், சளியை ஏற்படுத்தும் தொற்று பாதிப்புகளை தடுக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. உடல் பாகங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பண்பு, மஞ்சளில் உள்ளது. மஞ்சள், செரிமான கோளாறுகளையும் மஞ்சள் சரிசெய்கிறது.
இஞ்சி:
இஞ்சியில் இருக்கும் பண்புகள், தொண்டை புண்களை ஆற்றுகிறது. இதனால், இருமல் வராமல் தடுக்க முடியும். நெஞ்சிர்ச்சலை தடுத்து, வயிற்றில் அமிலம் சுரப்பதை தடுக்கும். இதனால், செரிமான கோளாறுகள் சரியாகி, வீக்கத்தையும் சரி செய்யும். நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | செரிமானம், இதயம், எடை இழப்பு... பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு வேர்க்கடலை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ