கணவன்-மனைவி உறவு என்பது வாழ்வின் இறுதிவரை வரக்கூடிய ஒன்று என்பதால், இந்த உறவு உறுதியானதாக இருக்கவேண்டும். எந்தவொரு உறவும் கடைசி வரை சுமூகமாக இருந்துவிடாது, உறவு எப்போதுமே சவால் நிறைந்ததாக தான் இருக்கும். அந்த சவால்களை நாம் திறமையாக கையாண்டு கடந்து வர வேண்டும். ஒரு உறவில் பல தம்பதிகள் செய்யும் சில தவறுகளால் விரக்தி, புண்படுத்தும் உணர்வுகள் போன்றவை ஏற்பட்டு இறுதியில் அந்த அறிவு முறிந்து விடுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. திறம்பட தொடர்பு கொள்ளத் தவறுவது மற்றும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புறக்கணிப்பது முதல் ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வது மற்றும் பொறாமையை எடுத்துக் கொள்ள அனுமதிப்பது வரை, இந்த தவறுகள் வலுவான உறவின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இந்த தவறுகளைப் புரிந்து கொண்டு, அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் துணையுடனான உங்கள் வலுவான பிணைப்பை நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். உறவில் கணவன் மனைவி எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
1) இந்த உலகில் மனிதர்களாக பிறந்தவர்கள் யாரும் சரியானவர்கள் இல்லை, அதேபோல எந்தவொரு உறவும் சரியானது அல்ல. எல்லா உறவுகளிலும் திருப்தியற்ற விஷயங்கள் நிறைய உள்ளது. தவறான உறவில் அல்லது தவரென்ன நபருடன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் மாற்றத்தை கட்டாயப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, உங்கள் துணையின் வரம்புகளை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும்.
2) நீங்கள் நினைக்கும் அனைத்தும் உங்களுக்கு தேவையில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் தான் வலிகளும், வேதனைகளும் இருக்காது. அதனால் உங்கள் துணையிடம் உங்கள் தேவைகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகுங்கள், அப்படி நீங்கள் எதிர்பார்த்ததை உங்கள் துணையால் நிறைவேற்ற முடியாமல் போகும்போது அது உங்களுக்குள் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
3) உங்கள் உறவை உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆக்கிக் கொள்ளாதீர்கள், உறவில் ஒரு நிறைவைக் கண்டறிய பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபாடு காட்டுங்கள். இதுபோன்று நீங்கள் செய்யும்பொழுது உங்கள் உறவில் ஏற்படக்கூடிய தேவையற்ற மோதல் அல்லது ஏமாற்றம் தடுக்கப்படும். மேலும் உங்கள் உறவை சிக்கலான ஒரு அமைப்பில் கொண்டு செல்லாமல் சுமூகமாக கொண்டு செல்லுங்கள்.
4) உங்கள் துணை ஒரு தவறு செய்கிறார் என்றால் அவர்கள் மீது குறைகூறாமல் அதனை பக்குவமாக எடுத்து சொல்ல பழகுங்கள், இல்லாவிட்டால் அது அவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துவிடும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் சொந்த செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியது அவசியம், ஏனெனில் உங்களின் சிறு மாற்றம் கூட உறவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். எனவே உங்களை நீங்கள் கட்டுப்பாடாக வைத்திருங்கள் இல்லாவிட்டால் அது உங்கள் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
5) ஆசை என்பது இயற்கையாக நிகழும் ஒரு விஷயமா அல்ல, அது தன்னிச்சையாக நமக்குள் நாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு ஆபத்தான உணர்வும் கூட. அதீத ஆசை ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆசை அதிகரிக்கும்போது அதன் வலைக்குள் நீங்கள் வீழ்ந்து உங்கள் உறவில் விரிசல் ஏற்பட தொடங்கிவிடும். தேவையற்ற விஷயங்களுக்கு ஆசைப்படுவதை விட அர்த்தமுள்ள விஷயங்களுக்கு மட்டுமே ஆசைப்பட கற்றுக்கொள்ளுங்கள்.
6) எல்லா தம்பதிகளுக்குள்ளும் ஏதேனும் ஒரு சூழலில் சண்டை வர தான் செய்யும், அதனால் மோதல்கள் கைமீறிப் போகும் முன் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டியது அவசியம். தம்பதிகள் முன்கூட்டியே எல்லா விஷயங்களையும் சுமூகமான முறையில் பேசி தீர்க்க வேண்டும். ஒருவர் உணர்ச்சிவசப்படும்போது மற்றொருவர் அமைதியாக சென்றுவிட வேண்டும், இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தால் மோதல் முற்றி அது உறவை கெடுத்துவிடும்.
7) நீங்கள் சிறுவயதிலிருந்தே எதாவது ஒரு விஷயத்தால் தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்படுவீர்கள். எந்த விஷயத்தால் நீங்கள் அதிகம் தூண்டப்படுகிறீர்கள் என்பதை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தை பருவத்தில் நாம் எந்த விஷயத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறமோ அது நமது எதிர்காலத்தில் பெரியளவில் சிக்கலை உண்டுபண்ணும் என்பதால் சிறு வயதிலிருந்து பிரச்சனைகளை களைய முற்படுங்கள். ஆரம்ப அனுபவங்கள் மற்றும் உங்கள் தற்போதைய உறவுடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே உங்கள் உறவு திருப்திகரமாக அமைய வேண்டுமானால் ஆரம்பகால பிரச்சனைகள் சரிசெய்யுங்கள்.
மேலும் படிக்க | ஆண்கள் ரகசியமாக செய்யும் விஷயங்கள் என்ன என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ