பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே!

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவானது நாமினேஷன் செயல்முறை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

Last Updated : Nov 30, 2020, 09:57 AM IST
    1. ஆரியின் கோபம் வெளிப்பாடு எதிர் நபருக்கு பயமாக இருக்கிறது- ரம்யா
    2. புன்னகையுடன் பேசுவதன் மூலம் ஹவுஸ்மேட்ஸை காயப்படுத்துகிறார்
    3. பாலாவின் நிழலில் சிவானி இருப்பதாக கூறி நாமினேட்
பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே! title=

பிக் பாஸ் 4 இன் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவானது நாமினேஷன் செயல்முறை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. அர்ச்சனா சனத்தை நாமினேட் செய்வதை காணலாம், பின்னர் பாலாவும் ரம்யாவும் ஆரியை நாமினேட் செய்தனர். 

ஆரியின் கோபம் வெளிப்பாடு எதிர் நபருக்கு பயமாக இருக்கிறது என்று கூறி ஆரியை ரம்யா நாமினேட் செய்கிறார். அதே சமயம், ரியோ (Rio Raj), நிஷா மற்றும் ரமேஷ் ஆகியோர் புன்னகையுடன் பேசுவதன் மூலம் ஹவுஸ்மேட்ஸை காயப்படுத்துகிறார் என்ற காரணத்தை வைத்து ரம்யாவை நாமினேட் செய்கின்றனர். 

ALSO READ | Big Boss Tamil 4: இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?

இதற்கிடையில் சிவானி ஆரியை நாமினேட் செய்கிறார். மேலும் அர்ச்சனா, கேப்ரியெல்லா, ஆஜீத் மற்றும் ஆரி ஆகியோர் சிவானியை நாமினேட் செய்வதை பிக் பாஸ் 4 (Bigg Boss Tamilஇன் முதல் புரோமோ வீடியோவில் காணலாம். சிவானியை நாமினேட் செய்த அர்ச்சனா, பாலாவின் நிழலில் சிவானி இருப்பதாக கூறி நாமினேட் செய்துள்ளார்.

These 4 contestant getting nominated this week in Bigg Boss 4!

எனவே புரோமோவின் படி, நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஆரி, சனம் ஷெட்டி (Sanam Shetty), சிவானி நாராயணன் மற்றும் ரம்யா பாண்டியன் என்று வெளிப்படையாக தெரிகிறது. 

ALSO READ | பிக் பாஸ் தமிழ் 4 அப்டேட்: ரியோவை ரவுண்டு கட்டி சண்டை போட்ட சனம்-அனிதா!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News