சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒறே நேர்கோட்டில் வரக்கூடிய நிகழ்வே கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு எப்போதும் பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாளில் தான் ஏற்படும். கிரகணத்தின் போது சந்திரன் மீது விழும் சூரிய ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மறைத்தால் அது பகுதி சந்திர கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19ம் தேதி நிகழ உள்ளது. சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் இதுவாகும். பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். இது 580 ஆண்டுகளில் மிக நீண்ட கிரகணமாக இருக்கும்.
நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி கிரகணம்
என ட்வீட் செய்துள்ள அமெரிக்காவின் பல்டர் பலகைகழகத்தின் இண்டியானா ஆய்வகம், 'இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி கிரகணம் நவம்பர் 19 நிகழும். 580 ஆண்டுகளில் இதுவே மிக நீண்ட பகுதி சந்திர கிரகணமாகவும் இருக்கும்!' மிக நுட்பமாக நிறம் மாறும் நிலவை காண வாய்ப்பு கிடைக்கும். அது சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். மேலும், இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19 அன்று மதியம் 2.19 மணிக்கு EST (இந்திய நேரப்படி மதியம் 12.49) தொடங்கும் என நாசா (NASA) கூறியுள்ளது.
ALSO READ | திருத்தணியில் சூரசம்ஹாரம் எப்போதுமே கிடையாது! காரணம் தெரியுமா?
இந்த கிரகணம் நான்கு முக்கிய கட்டங்களில் நிகழும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது, அதிகாலை 1.02 மணிக்கு EST பகுதி நேர கிரகணம் நிகழும். இந்த நிலை பொதுவாக சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் காண்பது கடினம் எனவும் கூறப்படுகிறது. 2021 நவம்பர் 19ம் தேதி அன்று, இந்திய நேரப்படி காலை 11:32:09 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.33 மணி வரை நீடிக்கும். அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது.
அதிகபட்ச கிரகணம் ESTஅதிகாலை 4.03 மணிக்கு நிகழும் என்றும், அப்போது சந்திரனின் 97% பூமியின் நிழலின் இருண்ட பகுதியால் மூடப்பட்டிருக்கும் என்றும், இது அடர் சிவப்பு நிறமாக மாறும் என்றும் ஆய்வகம் கூறியது. பகுதி நேர கிரகணம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தெரியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
ALSO READ | அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்ட இந்த ‘5’ விஷயங்களை கடைபிடிக்கவும்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR