தளபதி 62! படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியிட  உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Last Updated : Jun 19, 2018, 10:39 AM IST
தளபதி 62! படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! title=

விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியிட  உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படிப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்தது. 

இதையடுத்து, இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது விஜய் நடிக்கும் தளபதி 62 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Trending News