இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 827 ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு, குழந்தைகளின் ஆபாச படங்களை கொண்டுள்ள இணையதளங்களை முடக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கினை அதை விசாரித்த நீதிபதிகள், 857 ஆபாச இணைய தளங்களை முடக்கும்படி கடந்த மாதம் உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் 857 ஆபாச இணையதளங்களை ஆய்வு செய்ததில் 30 தளங்களில் ஆபாச படங்கள் இல்லை. மீதி 827 இணையதளங்களில் ஆபாச படங்கள் இருந்தன.
அந்த வகையில் அந்த மீதி 827 இணையதளங்களை முடக்கும்படி மத்திய எலெக்ட்ரானிக் தகவல் தொழில்நுட்பத்துறை டெலிபோன் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படிப்படியாக ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டு வருகிறது.