ஆசிரியர்கள் தினம் 2023- இதன் சிறப்புகள் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Teachers Day 2023: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களைக் கொண்டாடி மகிழும், இந்த தினத்தின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 5, 2023, 05:49 AM IST
  • இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5) தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.
  • எப்படி வந்தது ஆசிரியர்கள் தினம்?
ஆசிரியர்கள் தினம் 2023- இதன் சிறப்புகள் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? title=

ஆசிரியர் தினம் 2023: மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் தான் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசானாக ஆரசிரியர்கள் விளங்குகின்றனர். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே. ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து தனது, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் தான் திகழ்கின்றனர். 

இந்நிலையில் அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதியை, நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

ஆசிரியர் பணி ஓர் அறப்பணி:
வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியரின் பணி அல்ல. அவற்றையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும். இதன் அடிப்படை கூறுகளாக ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவற்றைக் கூறலாம். இப்பணியைச் செய்வதற்கு தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராகவும் செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க | இதை மட்டும் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாது - மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் பேச்சு

எப்படி வந்தது ஆசிரியர்கள் தினம்:
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் தான் இந்த தினம் விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள். நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான தான் நாம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டமானது கடந்த 1962ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறோம் நாம். 

யார் இந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்?
திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கந்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.

1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923ஆம் ஆண்டு ”இந்தியத் தத்துவம்” என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

1931ஆம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பான ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்து செய்திகள்:

* புத்தகங்களை விட பொது அறிவை கற்றுக் கொடுத்தவர் நீங்களே... ஒன்றும் தெரியாத பருவத்தில் என் கைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தீர்கள்.... என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்... "இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்"!

* நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, என் உத்வேகத்தின் வழிகாட்டியும் நீங்களே! உங்களை நாங்கள் பெற்றிருப்பது எங்கள் அதிர்ஷ்டம்.. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

* வாழ்க்கையில் துணிச்சலாக கேள்வி கேட்கவும், ஆச்சரியப்படவும், சிந்திக்கவும் என்னைத் தூண்டியது நீங்கள்தான். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!

* நீங்கள் பல திறமைகளைக் கொண்ட மனிதர். ஒரு சிறந்த ஆசிரியர், எழுச்சியூட்டும் முன்மாதிரி, சரியான வழிகாட்டியாக விளங்கியவர். இந்த ஆசிரியர்கள் தினத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

* மாணவனாக வந்த என்னை நண்பனாக வழிநடத்தி, சிறந்த கல்வியாளராக விளங்கியமைக்கு நன்றி ஐயா! இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

மேலும் படிக்க | நீண்ட கால குடியரசுத் தலைவர் முதல் போட்டியின்றித் தேர்வானவர் வரை - இந்தியக் குடியரசுத் தலைவர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News