குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் கலாச்சாரம் தற்போது சிறிய நகரங்களுக்கும் பரவிவருகிறது. 

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 4, 2022, 01:22 PM IST
  • மும்பையில் கடந்த சில தினங்களாக மழை
  • மழைக்கு நடுவே குதிரையில் உணவு டெலிவரி
  • குதிரையில் உணவு டெலிவரி செய்த வீடியோ
குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ! title=

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் கலாச்சாரம் தற்போது சிறிய நகரங்களுக்கும் பரவிவருகிறது. 

இளைஞர்கள் பலருக்கு இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன. பைக்குகளில் சென்று உணவுகளை டெலிவரி செய்யும் இளைஞர்கள், ஓரிரு இடங்களில் சைக்கிள்களிலும் சென்றும் உணவை டெலிவரி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நபர் ஒருவர் வித்யாசமாக குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்துள்ளார்.

மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் கொட்டும் மழையில் அந்த ஸ்விக்கி ஊழியர் உணவு டெலிவரி செய்தார். 

உணவு பேக்கிங்கைத் தனது முதுகுப் பக்கம் மாட்டிக்கொண்டு வெள்ளை குதிரையில் ஜம்மென சவாரி செய்கிறார் அந்த நபர். ட்ராபிக்குக்கு நடுவே குதிரையில் உணவு டெலிவரி செய்த அவரை பலரும் வேடிக்கை பார்த்தனர். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த 'புதிய' சிக்கல்! - வேற ரூட் போடும் இ.பி.எஸ் தரப்பு!

சாலை மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குதிரையில் டெலிவரி செய்த அவரை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.

அதேநேரம், பைக்கில் சென்றாலே பார்சல் உடைந்துவிடக்கூடிய சூழலில் குதித்து குதித்துச் செல்லும் குதிரை சவாரியில் பார்சல்கள் சரியாக வீடுபோய்ச் சேருமா எனவும் சுவாரஸ்யமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | திருமணச் சான்று வாங்கப் போறீங்களா? - 'அந்த' ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News