Suzuki first electric car: சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் (Suzuki Motor Corp) 2025 க்குள் மின்சார வாகன சந்தையில் அடி எடுத்து வைக்கவுள்ளது. நிறுவனம் தனது முதல் மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. நிக்கி ஆசியாவின் அறிக்கையில் இந்த தகவல்கள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, இது ஒரு சிறிய வகை காராக இருக்கக்கூடும். இந்தியாவுக்குப் பிறகு, ஜப்பான், ஐரோப்பா போன்ற பிற சந்தைகளிலும் மின்சார காரை சுசுகி அறிமுகம் செய்யும்.
நிறுவனத்தின் திட்டமிட்ட மின்சார காம்பாக்ட் மாடலின் விலை சுமார் 1.5 மில்லியன் யென் (13,626 டாலர்) இருக்கும் என்று நிக்கி ஆசியா கூறுகிறது. இந்திய ரூபாயில், இதன் விலை ரூ .10-11 லட்சம் வரை இருக்கக்கூடும். இதில் மின்சார வாகனங்களுக்கான அரசாங்கத்தின் மானியமும் அடங்கும்.
சுசுகி (Suzuki) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், சுசுகி விரைவில் மின்சார வாகன சந்தையில் அடி எடுத்து வைக்குமென்றும் 2025 க்குள் அசத்தலான ஒரு ஹைப்ரிட் காரை அறிமுகம் செய்யும் என்றும் கூறினார். இருப்பினும், இந்தியாவில் மின்சார வாகனம் எப்போது அறிமுகமாகும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து நிறுவனம் எந்த தகவலையும் அளிக்கவில்லை.
ALSO READ: Suzuki Electric Scooter: இணையத்தில் கசிந்த சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வரைபடம்!
உலகின் ஐந்தாவது பெரிய வாகன சந்தை
நிக்கி ஆசியாவின் அறிக்கையின்படி, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய வாகன சந்தையாக இருந்தாலும், மின்சார வாகனங்களின் விற்பனை மந்தமாகவே உள்ளது. இந்தியாவின் ஆண்டு வாகன விற்பனை சுமார் 30 லட்சம் ஆகும். 2030 க்குள், நாட்டில் விற்கப்படும் புதிய கார்களில் 30 சதவிகித விற்பனை மின்சார கார்களுக்கானதாக (Electric Car) இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது.
மின்சார கார்களின் விற்பனையை ஊக்குவிக்க, ரூ .10,000 கோடி ஊக்கத்தொகையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஜூன் மாதத்தில், மின்சார கார்களுக்கான சலுகைகளை அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
இந்தியாவில் சுசுகியின் 50% பங்கு
சுசுகி (மாருதி சுசுகி இந்தியா) இந்திய சந்தையில் சுமார் 50 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனம் (Electric Vehicle) அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், இந்த சந்தையில் போட்டியை தீவிரப்படுத்த முடியும் என்று நிறுவனம் நம்புகிறது. மாருதி சுசுகியின் காம்பாக்ட் கார்களில் வேகன் ஆர், பலேனோ, ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும். மாருதி சுசுகி இந்திய சாலைகளில் வேகன் ஆர் போன்ற மின்சார மாடல்களை சில காலமாக சோதித்து வருகிறது.
ALSO READ:Electric Vehicles: மின்சார வாகனம் வாங்கினால் பம்பர் மானியம், அரசாங்கம் கூறியது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR