பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு பெற உதவியாக இருந்தது என அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது முன்பணம் செலுத்தாமலேயே சமையல் எரிவாயு (LPG) இணைப்பு பெறலாம் என்பது மக்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும்.
வைப்புத்தொகை செலுத்தாமலேயே எரிவாயு இணைப்பு என்பதோடு, புதிய கேஸ் சிலிண்டர் மற்றும் ஹாட் ப்ளேட்டும் பணம் இல்லாமலேயே பெற்றுக் கொள்ளலாம்.
ஆச்சரியமாக இருக்கிறதா? பிரதம மந்திரி உஜ்வாலா 2.0 திட்டத்தில் அனைத்தும் இலவசம் தான். இந்தத் திட்டத்தை ஆகஸ்ட் 10ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
Also Read | LPG மானியம் தவறுதலாக கைவிட்டுப் போனதா? மீண்டும் சுலபமாக பெறலாம்
இந்த திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு எல்பிஜி இணைப்புகள் கொடுக்கப்படும். அன்று முதல் உஜ்வலா திட்டத்தின் 2.0 மூலம் மக்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்கும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ செய்தியின்படி, பிரதமர் மோடி உஜ்வாலா 2.0 பயனாளிகளுடன் பேசுவார், அதோடு நாட்டு மக்களுக்கும் பிரதமர் உரையாற்றுவார்.
உஜ்வாலா 2.0 இல், பயனாளிகள் எந்த வைப்பு கட்டணமும் இல்லாமல் எல்பிஜி இணைப்பைப் பெறுவார்கள். இதனுடன், முதல் சிலிண்டர் இலவசமாக நிரப்பப்படும் மற்றும் ஹாட் பிளேட்டும் இலவசமாக கிடைக்கும். உஜ்வாலா 2.0 இல் பதிவு செய்வதற்கு குறைந்தபட்ச ஆவணங்கள் தேவைப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். உஜ்வாலா 2.0 இல், குடியேறுபவர்கள் ரேஷன் கார்டு அல்லது முகவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. குடும்பத்தினரின் விவரங்களை தெரிவிப்பதுடன், முகவரி சான்றுக்கு பயனாளிகள் சுய அறிவிப்பு ஒன்றை அளித்தால் அதுவே போதுமானது.
Also Read | Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்
நாட்டு மக்கள் அனைவருக்கும் எல்பிஜி இணைப்புகளை வழங்குவதற்கான பிரதமரின் தொலைநோக்குத் திட்டம் உஜ்வாலா 2.0 மூலம் நிறைவேறும் என்று பிரதமர் அலுவலகம் (The Prime Minister's Office) தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெறும். 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் உஜ்வாலா யோஜனாவின் கீழ் ஒரு கோடி கூடுதல் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த 1 கோடி கூடுதல் PMUY இணைப்புகளின் நோக்கம் (உஜ்வாலா 2.0 இன் கீழ்) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக LPG இணைப்புகளை வழங்குவதே ஆகும்.
Also Read | LPG cylinder முன்பதிவில் 10% சூப்பர் கேஷ்பேக் ஆஃபர்! எப்படி பெறுவது தெரியுமா?
இந்தத் திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டது. உஜ்வாலா யோஜனா 2016 இல் தொடங்கப்பட்டது. உஜ்வாலா 1.0 இன் கீழ், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள (Below Poverty Line) குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண் உறுப்பினர்களுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் ஏப்ரல் 2018 இல் விரிவுபடுத்தப்பட்டது மற்றும் ஏழு பிற பிரிவுகளைச் சேர்ந்த பெண் பயனாளிகள் (SC/ST, PMAY, AAY, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிபவர்கள், ஆதிவாசிகள், காடுகளில் வசிப்பவர்கள்) இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதோடு, உஜ்வாலா 1.0 இலக்கு எட்டு கோடியாக மாற்றியமைக்கப்பட்டது.
Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR