20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ‘சூப்பர் ப்ளூ மூன்’! மிஸ் பண்ணிடாதீங்க..வருதப்படுவீங்க!

Super Blue Moon 2023: நிலா, பூமிக்கு மிக அருகில் வரும் ப்ளூ மூன் நிகழ்வு, இன்று நடக்க இருக்கிறது. இந்த ப்ளூ மூன் நிகழ்வை காண மக்கள் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Aug 30, 2023, 11:22 AM IST
  • இன்று நிலா பூமிக்கு அருகில் வரும் அரிய நிகழ்வு நடக்கிறது.
  • இந்த சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு இத்துடன் 14 வருடங்களுக்கு பிறகுதான் நிகழும்.
  • சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை பார்ப்பது எப்படி? இதோ முழு விவரம்.
20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ‘சூப்பர் ப்ளூ மூன்’! மிஸ் பண்ணிடாதீங்க..வருதப்படுவீங்க!  title=

ஆகஸ்டு 30ஆம் தேதியான இன்று, அறிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் தெரிய இருக்கிறது. இதைக்காண மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதற்கு முன்னர் நீங்கள் சூப்பர் ப்ளூ மூன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..? 

ப்ளூ மூன்: நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து நிகழ்வது ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்தாண்டின் மிகப்பெரிய, மிகப் பிரகாசமாக நிலவை இன்று நாம் காணலாம்.

மேலும் படிக்க | மனைவி செய்த கொடூரம்..! படங்களை மிஞ்சும் ட்விஸ்டு..! ஆடிப்போன நாமக்கல் போலீஸ்!

ஒவ்வொரு ப்ளூ மூனும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாக, கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு நடந்தது. இரண்டாண்டுகளுக்கு தற்போது தான் ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழ்வைப் பார்க்கவிருக்கிறோம்.

1 மாதத்தில் இரண்டு பெளர்ணமி..

ஒரே மாதத்தில் இருமுறை பௌர்ணமி வருவது ‘ப்ளூ மூன்’ என்றழைக்கப்படுகிறது. ‘ப்ளூ மூன்’ என்றால் நிலா நீல நிறத்தில் காட்சியளிப்பது என்று பொருள் இல்லை. அதேநேரம், தூசித் துகள் காரணமாக, ப்ளூ மூன் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் சேர்ந்து நிகழ்வது மிகவும் அரிதாகக் கருதப்படுகிறது. இது 10 (அல்லது) 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும். அடுத்த சூப்பர் ப்ளூ மூனை 2037- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் காண முடியும்.

ப்ளூ மூனை பார்ப்பது எப்படி..? 

இன்று மாலை சூரியன் மறைந்து, இருளும் வேளையில் இந்த ப்ளூ மூனை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூப்பர் ப்ளூ மூனை இன்று இரவு 8:37 மணியளவில் காண உகந்த நேரம் எனவும் கூறப்படுகிறது.  அடுத்த 

மிஸ் பண்ணிடாதீங்க..14 வருடங்களுக்கு பிறகுதான்..!

ஆங்கிலத்தில் "Once in a Blue Moon" என்ற அழகான வாக்கியம் உள்ளது. இதற்கு அர்த்தம் “எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு” என்பதுதான். பூமிக்கு மிகவும் அருகில் நிலா வருவது அரிய நிகழ்வு என்பதால் இந்த சொற்றொடர் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA இன்று நிகழும் ப்ளூ மூன் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. அதில், இந்த நிகழ்விற்கு பிறகு, ப்ளூ மூனை 14 ஆண்டுகளுக்கு பிறகுதான் காண முடியும் என்று குறிப்பட்டிருந்தது. அதாவது, இன்று இந்த ப்ளூ மூன் நிகழ்வை தவற விட்டுவிட்டால் 14 வருடங்களுக்கு பிறகு 2037ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் அரிய ப்ளூ மூன் நிகழ்வைதான் காண முடியும். அதனால், ‘மிஸ் பண்னிடாதீங்க..அப்பறம் வருத்தப்படுவீங்க!’ 

மேலும் படிக்க | முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News