Student Credit Card: கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாம் செலவு செய்யும் பழக்கத்தை பல விதங்களில் மாற்றியுள்ளது. இப்போது பெரும்பாலான மக்கள் அவசர காலங்களில் சேமிப்புக் கணக்குகளுக்குப் பதிலாக கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துகின்றனர். வழக்கமான கிரெடிட் கார்டுகளைப் போல மாணவர் கிரெடிட் கார்டுகளும் நடைமுறையில் உள்ளன. அவை கல்லூரி மாணவர்களின் செலவுகள் மற்றும் வருவாய்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர் கிரெடிட் கார்டுகள் (Credit Card) உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் அதை எளிதாக செலவழிக்கவும் உதவுகின்றன. இந்தியா அல்லது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளில் பல சலுகைகளும் உள்ளன.
மாணவர் கிரெடுட் கார்டின் நன்மைகள் மற்றும் அம்சங்கள்
இந்த கிரெடிட் கார்டுகள் வரையறுக்கப்பட்ட கடன் வசதியுடன் வருகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் அனாவசியமாக பணம் செலவழிக்க வழியில்லாமல் போகிறது. அவர்கள் மீது கடன் சுமையும் இல்லாமல் இருக்கிறது. இந்த அட்டையின் கீழ் பணம் எடுக்கும் அளவு குறைவாக உள்ளது. எனவே மாணவர்கள் இந்த தொகையை மிகவும் திட்டமிட்டு செலவழிக்கிறார்கள்.
இந்த கிரெடிட் கார்டின் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்ததும் இந்த அட்டையை ஸ்டாண்டர்ட் கிரெடிட் கார்டாக மாற்றலாம். மாணவர்கள் தங்கள் வேலை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப அதன் வரம்பையும் அதிகரிக்கலாம். உங்கள் கிரெடிட் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை (Credit Score) மேம்படுத்துகிறது. மாணவர்கள் சிறு வயதிலேயே நிதி மேலாண்மையைப் புரிந்துகொள்கிறார்கள். மாணவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் மாணவர் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பது மிகவும் முக்கியமாகும். விண்ணப்பிப்பவரின் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். இருப்பினும், கிரெட் கார்ட் அளிக்கும் சில நிறுவனங்கள் கல்வி கடன்களையும் கோருகின்றன.
ALSO READ: 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கும் டி.ஏ., ஊதிய உயர்வின் கணக்கீடு இதோ!!
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
மாணவர்களிடம் அவர்களது பெயரில் FD இருந்தால், அதை வைத்து கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, அவர்களது பெற்றோர்களிடம் ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டில் ஆட்-ஆன் வசதியை பயன்படுத்தி மாணவர் கிரெடிட் கார்டைப் பெறலாம்.
இந்த ஆவணங்கள் தேவைப்படும்
நீங்கள் ஒரு மாணவராக இருந்து, கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த ஆவணங்கள் உங்களுக்கு தேவைப்படலாம். கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு பிறப்புச் சான்றிதழ், கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஐடி, பான் கார்டு, குடியிருப்பு முகவரி சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.
ALSO READ: உங்களிடம் Airtel சிம் உள்ளதா? இப்படி செய்தால், ரூ.4 லட்சம் மதிப்பிலான நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR