எளிதில் வேலை கிடைக்க எந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.? இந்த டிப்ஸை படிங்க..!

வேலை தேடுபவரா நீங்கள்? நீங்கள் நினைக்கும் எளிதில் கிடைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை படித்து பயன் பெறுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 5, 2023, 02:19 PM IST
  • எளிதில் பிடித்த வேலை கிடைக்க வேண்டுமா.?
  • நேர்காணல்களில் பேசுவது எப்படி?
  • இன்றைய முதலாளிகள் எதிர்பார்பது என்ன?
எளிதில் வேலை கிடைக்க எந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.? இந்த டிப்ஸை படிங்க..! title=

இந்த நவீன யுகத்தில் முதலாளிகளுக்கு தேவை படுபவர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல, புத்திசாலித்தனமான வேலையாட்கள். அப்படிப்பட்டவர்களை வடிக்கட்டுவதற்காக நேர்காணல்களில் பல்வேறு சுற்றுகளை வைத்து பல ட்ரிக்ஸ்களை கையாள்வர். இதில் சிலவற்றில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம், சிலவற்றில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், அதிலிருந்து நீங்கள் ஏதேனும் கற்றுக்கொண்டீர்களா என்பதுதான் முக்கியம்.  நீங்கள், நேர்காணலில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்குள் இருக்கும் சில திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும், அந்த திறன்களை எப்படி வளர்ப்பது? இங்கே பார்ப்போம். 

பேச்சுத்திறன்:

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் அதை எப்படி பேசுகிறீர்கள் என்பதில்தான் உங்களிடம் பேசுபவர்கள் உங்களை எடை போடுவர். அதிலும் நேர்காணல்கள் என்று வந்துவிட்டால் பேச்சுத்திறன் மிகவும் முக்கியம். உங்கள் மனதில் தோன்று விஷயத்தை எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி எடுங்கள். அப்பொதுதான் நீங்கள் எது சொன்னாலும் அதில் அர்த்தம் உள்ளது என்பதை உங்களை நேர்காணல் எடுப்போர் நம்புவார்கள். பேசும் போது இடையிடையே அமைதியாக இருக்கலாம். ஆனால்,  “அஹ்...அது வந்து..” போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும். 

மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு சிறந்த அறிவாற்றல் இருக்குமாம்..! லிஸ்டில் உங்கள் ராசி உள்ளதா..?

கையாளும் திறன்:

நீங்கள் மர்கெட்டிங்க் வகையிலான வேலையை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான நுகர்வோரிடம் எப்படி பேசுவது என்பதை கற்றுகொள்ள வேண்டும். ஒருவரை ஒரு பொருளை வாங்க வைக்கும் வகையிலோ அல்லது ஒருவரை ஒரு விஷயத்தை நம்ப வைக்கும் வகையில் பேசுவது, உங்கள் கையில்தான் உள்ளது. 

தலைமை தாங்குதல்:

இந்த ஆண்டின் தரவுகளின் படி, பல முதலாளிகள், தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் ஒரு நிறுவனத்தையே வழி நடத்தும் அளவிற்கு அறிவார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். உங்களிடம் இந்த திறன் இல்லையென்றால் அதை வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களிடம் எந்த திறமை அதிகமாக இருக்கிறது என நம்புகிறீர்களோ அதை நன்றாக வளர்த்துக்கொண்டால் தலைமை திறன் வந்துவிடுமாம். 

நுண்ணிப்பாக கவனிக்கும் திறன்:

பலருக்கு ஒரு விஷயத்தை நன்றாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் திறன் இல்லை. நேர்காணலில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால், அது நன்கு புரிந்தால் மட்டும் அதற்கு விடையளிக்கவும். அப்படி உங்களுக்கு அந்த கேள்வி புரியவில்லை என்றால், அவசரப்பட்டு எதையாவது ஒன்று என்று பதிலளிக்காமல், அந்த கேள்வி புரியவில்லை என கூறி அவர்களிடம் மீண்டும் அந்த கேள்வி என்ன என்று கேட்கவும். இது, நீங்கள் எந்த அளவிற்கு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை காண்பிக்கும். 

ஆராய்ச்சி..

நன்கு ஆராயும் திறன், உங்களுக்கு நேர்காணலின் போது மட்டுமல்ல பிற்காலத்திலும் உதவும். ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலிற்காக செல்லும் முன் அது குறித்து நன்கு ஆராயவும். தலைமையில் இருந்து அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் வரை யார் யார் பற்றி தகவல் கிடைக்கிறதோ அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நிறுவனத்தின் தலைவரின் பெயர், நிறுவனத்தின் லோகோ, நிறுவனத்தின் பெயர் காரணம் இப்படி என்னென்ன தகல்கள் கிடைக்கிறதோ அதை எல்லாம் சேகரித்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன பிரிவிலான வேலைக்கு நேர்காணலுக்கு செல்கிறீர்களோ அந்தபிரிவு குறித்து என்ன கேள்வி கேட்டாலும் உங்களுக்கு தெரியும் அளவிற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | தினமும் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா..? குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News