DIY Hair Masks For Dry Hair : தலைமுடி பிரச்சனை என்பது நம்மில் பலருக்கு தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இப்படி, முடி உலர்ந்து போவதற்கு ஷாம்பூ, உபயோகிக்கும் தண்ணீர், மரபணு குறைபாடு உள்ளிட்ட பல காரணமாக இருக்கின்றன. பல சமயங்களில் வைட்டமின் குறைபாடுகளும் இதற்கு காரணமாக இருக்கும். இதை சரிசெய்ய நாமே வீட்டில் சில மாஸ்குகளை செய்யலாம். அதற்கான குறிப்புகளை இங்கு பார்ப்பாேம்.
வாழைப்பழம்-தயிர் மாஸ்க்:
வாழைப்பழம் மற்றும் தயிரை மாஸ்க் ஆக உபயோகிக்கலாம். இது, உங்கள் முடியை பளபளப்பாக்க உதவும். முதலில் பழுத்த வாழைப்பழத்தை எடுத்து அதை பிசைந்து தயிருடன் சேர்க்க வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் முடியின் வேர் முதல் அடி வரை தடவ வேண்டும். இதை, அரை மணி நேரம் தலையில் ஊற வைத்து விட்டு, பின்னர் ஷாம்பூ போட்டு கழுவலாம். இதனால் முடியை மென்மையாக வைத்திருக்க உதவும்.
வாழைப்பழம் தேன் மாஸ்க்:
வாழைப்பழத்தை தேனுடன் சேர்த்து கலக்கி, அதை ஹேர் மாஸ்காக மாற்றலாம். இதை, முடியின் அனைத்து பாகங்களிலும் தடவ வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் அதனை ஊற வைக்க வேண்டும். இதனால் உங்கள் முடி சில்கியாக மாறி, இன்னும் பளபளப்பாக மாறும். இதனால், உங்கள் முடி வறண்டு போகாமலும் பாதுகாக்கலாம்.
வாழைப்பழம் முட்டை மாஸ்க்:
வாழைப்பழத்தையும் முட்டையும் வைத்து மாஸ்க் செய்யலாம். பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து அதனை முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கலக்கி பின்னர் தலையில் தடவ வேண்டும். 30 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு தலைக்கு குளிக்க வேண்டும். இது, முடியை மாய்ஸ்ட்ரைஸ் ஆக்க உதவும். முடியின் தழைகளும் வலுவாகும்.
மேலும் படிக்க | Hair Care Tips: ஓவர் முடி உதிர்வா? அப்போ 'இதை' மட்டும் செய்தால் போதும்
வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்:
தேங்காய் எண்ணெய் பொதுவாகவே நமக்கு முடி வளர உதவும் விஷயமாகும். இதனை, வாழைப்பழத்துடன் சேர்த்து, முடியில் சமமாக தடவ வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் உங்கள் முடியை வழவழப்பாக வைத்திருக்க உதவும்.
வாழைப்பழம் ஆலிவ் ஆயில்:
வாழைப்பழத்தையும் ஆயில் எண்ணெயையும் வைத்து ஒரு மாஸ்கை செய்யலாம். ஒரு வாழைப்பழம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வைத்து இதை செய்ய வேண்டும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்க வேண்டும். இதனை, 30 முதல் 45 நிமிடங்கள் தலையில் ஊற வைத்து பின்பு தலையை அலச வேண்டும். இதனால் முடி வெடித்திருப்பது மற்றும் முடி உலர்ந்து பாேவது சரியாகும்.
வாழைப்பழம் அவகேடோ:
வாழைப்பழத்துடன் அவகேடோவையும் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யலாம். இதற்கு தேவையானது, ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு பழுத்த அவகேடோ. இது இரண்டையும் சேர்த்து 30 முதல் 40 நிமிடங்களுக்கு ஊற வைக்கலாம். பின்னர் அதனை உங்கள் முடிக்கு சரியான ஷேம்புவை சேர்த்து தலையை அலச வேண்டும். இதனால் வறண்டு போய், உலர்ந்து போயிருக்கும் முடி பளபளவென மென்மையானதாக மாறி விடும்.
மேலும் படிக்க | முட்டையை இதோடு கலந்து தேய்த்தால் முடி பளபளப்பாகும் - பொலிவாகும் வறண்ட முடி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ