பிரதமர் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!!

பிரதமர் மோடி தியானம் செய்ய, 1892 டிசம்பர் 25 முதல் 27 வரை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறையை தேர்வு செய்துள்ளார்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2024, 01:38 PM IST
  • சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது வரலாற்று உரைக்கு முன் மூன்று நாட்கள் இந்த பாறையில் தியானம் செய்தார்.
  • 1972 ஜனவரியில் 'விவேகானந்த கேந்திரா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • விவேகானந்தர் பாறையில் காட்டாயம் பார்க்க வேண்டியவை.
பிரதமர் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை... இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..!! title=

பிரதமர் கோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை: லோக்சபா தேர்தல் 2024 கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில்  2 நாட்கள் தியானம் செய்வார். 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகும், பிரதமர் சுமார் 40 மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் கேதார்நாத் தாமில் உள்ள குகைக்கு சென்ற நிலையில், இம்முறை இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவிடத்தை அவர் தேர்வு செய்துள்ளார். 1892 டிசம்பர் 25 முதல் 27 வரை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

1892 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடற்கரையில் தியானம்  செய்த விவேகானந்தர் பாறை என்பது இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இங்கு 15 நிமிட படகு  சவாரி மூலம் செல்லலாம்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் வரலாறு

1970 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அரசு கட்டியது. இருப்பினும், 1963 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் இந்த நினைவிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு ஒரு பாறை உள்ளது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது வரலாற்று உரைக்கு முன் மூன்று நாட்கள் இந்த பாறையில் தியானம் செய்தார். சுமார் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டதாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1972 ஜனவரியில் 'விவேகானந்த கேந்திரா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு விவேகானந்தர் பாறையில் உள்ள நினைவு மண்டபத்தை நிர்வகிக்கிறது.

விவேகானந்தர் பாறையில் காட்டாயம் பார்க்க வேண்டியவை

விவேகானந்தர் பாறையின் அழகு யாரையும் வசீகரிக்கும். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவு மண்டபத்தில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் காட்சி பார்க்க அற்புதமான காட்சிகள். இங்கிருந்து சூரிய உதயத்தையும்  அஸ்தமனத்தையும் கண்டுகளிக்க மக்கள் வெகு தொலைவில் இருந்து வருகிறார்கள். விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகளை அறிய விரும்புபவர்களுக்கு இந்த இடம் சரியான தேர்வாக இருக்கும். 

மேலும் படிக்க | குறைந்த செலவில் சிங்கப்பூர் - மலேஷியா டூர் போகலாம்... அசத்தலான IRCTC பேக்கேஜ்!

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் தொடர்பான சிறந்த புத்தகங்கள் அடங்கிய விவேகானந்தா மைய நூலகம் உள்ளது. இது தவிர, சுவாமி விவேகானந்தரின் ஒரு கோவில் உள்ளது, அதில் அவரது பிரமாண்டமான வெள்ளை பளிங்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தர் மண்டபம் உள்ளது, அதில் தியான அறை உள்ளது. இந்த இடத்தில் தான் பிரதமர் மோடி தியானம் செய்யவுள்ளார். இந்த வளாகத்தில் ஒரு தபால் அலுவலகமும் உள்ளது. அதில் இருந்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பலாம்.

விவேகானந்தர் பாறை அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்

விவேகானந்தர் பாறைக்கு செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதற்கு மிக அருகில் உள்ள பல இடங்களை நீங்கள் கண்டு களிக்கலாம். திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையிலிருந்து  1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.  திருவள்ளுவரின் 133 அடி உயர கல் சிலை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக உள்ளது. விவேகானந்தர் பாரையிலிருந்து இருந்து லேடி ஆஃப் ரான்சம் என்ற கத்தோலிக்க ஆலயம் சுமார் 3 நிமிட தூரத்தில் உள்ளது. அமைதியான மற்றும் அழகான இடத்தை தேர்வு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

விவேகானந்தர் நினைவிடம் குறித்த பிற விபரங்கள்

விவேகானந்தர்  நினைவிடம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். இங்கு செல்ல ரூ.20 நுழைவு கட்டணம். படகு சவாரி செய்ய, ஒரு நபருக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும். அதேசமயம் நீங்கள் சிறப்பு படகு டிக்கெட் எடுக்க விரும்பினால், நீங்கள் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை

ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு, விவேகானந்தர் ராக் மெமோரியலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kanyakumaritourism.in/vivekananda-rock-memorial-kanyakumari தளத்திற்கு செல்ல வேண்டும். ஆஃப்லைன் டிக்கெட்டு பெற நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது நல்லது.

விவேகானந்தர் நினைவிடம்  செல்ல சிறந்த நேரம்

கன்னியாகுமரியில் கோடை காலம் அதிக வெப்பமாக இருக்கும். அதிக மழையும் பெய்யும். எனவே நீங்கள் விவேகானந்தர் பாறை செல்ல திட்டமிட்டால், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் சிறந்ததாக இருக்கும். இந்த நாட்களில் வானிலை ஆண்டு முழுவதும் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் சாதாரணமாக இருக்கும். வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் மற்றும் மழை குறைவாக இருக்கும். இந்த நாட்களில் படகு சவாரி செய்து மகிழலாம்.

மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News