நாட்டின் பல வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்கியுள்ளன. அதன்படி அக்டோபர் 2023 இல் பல வங்கிகள் இந்த மாதம் பொது மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன. ஏனெனில் தற்போது மூத்த குடிமக்கள் பிக்ஸட் டெபாசிட்களை பெரிதும் நம்பி முதலீடு செய்கிறார்கள்.
எந்தெந்த வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்:
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி): யூனிட்டி வங்கி 701 நாட்களுக்கு நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி யூனிட்டி ஸ்மால் வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.45% என்ற கவர்ச்சிகரமான விகிதத்தை வழங்குகிறது. 701 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 9.45% வட்டி விகிதங்கள் கிடைக்கும், பொது முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 8.95% பெறுவார்கள். யூனிட்டி வங்கி 1001 நாட்கள் வைப்புத்தொகைக்கு மூத்த குடிமக்களுக்கு 9.5% வட்டியும் மற்றவர்களுக்கு 9% வட்டியும் வழங்குகிறது.
மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் முன் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிகள்!
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda): பேங்க் ஆப் பரோடா, உள்நாட்டு சில்லறை டெர்ம் டெபாசிட்கள், என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ டேர்ம் டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை 3 ஆண்டுகள் வரை உயர்த்தியுள்ளது. இப்போது மூத்த குடிமக்களுக்கு 2 முதல் 3 வருட டெபாசிட்களுக்கு 7.9% வரை வட்டி வழங்குகிறது. மூவர்ண பிளஸ் டெபாசிட் திட்டத்தின் கீழ், பேங்க் ஆஃப் பரோடா மூத்த குடிமக்களுக்கு 399 நாட்கள் வைப்புத்தொகைக்கு 7.8% வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra): பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 46-90 நாட்கள் டெபாசிட்கள் மீதான FD விகிதங்களை 125 bps அதிகரித்துள்ளது. இந்த குறுகிய கால டெபாசிட்டுகளில் 3.50 சதவீதத்தில் இருந்து இப்போது 4.75 சதவீதத்தை வழங்குகிறது.
கனரா வங்கி (Canara Bank): கனரா வங்கி அதன் FD விகிதங்களை அக்டோபர் 5 முதல் திருத்தியது. இப்போது மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது.
யெஸ் வங்கி (Yes Bank): அக்டோபர் 4 முதல், யெஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
கர்நாடகா வங்கி (Karnataka Bank): அக்டோபர் 1 முதல், கர்நாடக வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இன்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank): அக்டோபர் 1 முதல், இன்டஸ்இண்ட் வங்கி மூத்த குடிமக்களுக்கு 8.25% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவி வங்கி (IDFC First Bank): அக்டோபர் 1 முதல், IDFC First Bank மூத்த குடிமக்களுக்கு 8% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank Of India): அக்டோபர் 1 முதல், பாங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை FD வட்டி விகிதங்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | 1 கோடி மத்திய ஊழியர்களுக்கு குட் நியூஸ்... டிஏ ஹைக், டபுள் சம்பளம் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ