A.R.ரஹ்மான் இசையில் பாலிவுட் பாடல் பாட ஆசை -செலினா கோம்ஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாலிவுட்டில் பாட ஆசைப்படும் பிரபல பாடகி செலினா கோம்ஸ்!!

Last Updated : Jul 22, 2018, 04:11 PM IST
A.R.ரஹ்மான் இசையில் பாலிவுட் பாடல் பாட ஆசை -செலினா கோம்ஸ் title=

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாலிவுட்டில் பாட ஆசைப்படும் பிரபல பாடகி செலினா கோம்ஸ்!!

அமெரிக்காவை சேர்ந்த பாடகியான செலினா கோம்ஸ் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும், குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இவரது முதல் ஆல்பம் கிஸ்&டெல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து ஆல்பம் மற்றும் ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனது 17-வது வயதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கெய்ன் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், செலினா கோம்ஸ் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மிகப்பெரிய ரசிகை. அவர் இன்று உலகில் பிரபலமான நபர். நான் அவரோடு சேர்ந்து பாடுவது அல்லது அவரது பாடல்களின் பகுதியாக நான் இருக்க விரும்புகிறேன். பாலிவுட் திரைப்படங்களில் பாடுவது அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

மேலும், “ஏ.ஆர்.ரஹ்மான் போல் இந்தியாவில் உள்ள பல இசையமைப்பாளர்களை பின் தொடர்கிறேன், அவர்கள் அற்புதமானவர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Trending News