பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!

LIC NEW Jeevan Shanthi Policy: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2023, 01:09 PM IST
  • எல்ஐசி புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டம்.
  • குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
  • அதிகபட்ச முதலீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை.
பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!  title=

Best LIC Policy: “லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Life Insurance Corporation of India)” இந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு காப்பீட்டு நிறுவனம். வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க, ஒவ்வொரு நாளும் பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதேசமயம், சில திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில்மிகவும் பிரபலமாக உள்ளன. நிகழ்காலம் வருங்காலம் இரண்டையும் பாதுகாப்பதற்காக, பலர் காப்பீடு அல்லது வேறு வகையான திட்டங்களீல் முதலீடு செய்கிறார்கள்

முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வாழ்நாள் முழுவதும் ரூ.11,192 வரை ஓய்வூதியம் பெற முடியும். எல்ஐசியின் புதிய ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

எல்ஐசி புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டம் (LIC New Lifetime Pension Scheme)

எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி (LIC New Jeevan Shanti Scheme) திட்டத்தின் மூலம் உங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். முதலீட்டினை பொர்றுத்தவரை இது ஒரு நல்ல நிதி திட்டமிடல் திட்டமாக இருக்கும், இது ஓய்வு பெற்ற பிறகும் உங்களை நிதி ரீதியாக பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்கான தகுதி மற்றும் பிற அம்சங்கள்

1. 30 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

2. எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசி என்பது ஒரு பிரீமியம் வருடாந்திரத் திட்டமாகும். இது நீங்கள் விரும்பும் காலத்திற்கு நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இந்த பாலிசி மூலம் நீங்கள் ரூ. 1 லட்சம் வரை ஆண்டு ஓய்வூதியம் பெறலாம்.

3. குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை.

4. இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்கு சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் என வருடாந்திரத் தொகையைத் தேர்வுசெய்ய ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்ட கால்குலேட்டர்

எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் இரண்டு விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால், உங்கள் ஓய்வூதியம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்படும். அதேசமயம், ரூ.10 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.11,192 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். இந்த வழியில், நீங்கள் ஓய்வுக்குப் பிறகும் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தலாம். 

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டு முறையிலும் எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.  ஆன்லைன் மூலம் இத்திட்டத்தில் சேர எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in-க்கு செல்ல வேண்டும்.  ஆஃப்லைன் வழியாக இத்திட்டத்தை பெற எல்ஐசி முகவர் மூலமாகவோ அல்லது உங்கள் அருகிலுள்ள எல்ஐசி கிளைக்கோ செல்லலாம்.  

Trending News