குழந்தைகளுக்கான bank account-ல் SBI அளிக்கும் இந்த சிறப்பம்சம் பற்றி உங்களுக்குத் தெரியுமா

SBI-ல் ஒரு குழந்தைக்காக ஒரு கணக்கைத் திறக்கும்போது, ​​பாதுகப்புக்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டிலும் குழந்தையின் புகைப்படம் அச்சிடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 09:08 PM IST
  • SBI குழந்தைகளுக்கான மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வசதியைக் கொண்டு வந்துள்ளது.
  • பாதுகப்புக்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டிலும் குழந்தையின் புகைப்படம் அச்சிடப்படுகிறது.
  • இந்த கணக்கின் கீழ் 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகம் வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான bank account-ல் SBI அளிக்கும் இந்த சிறப்பம்சம் பற்றி உங்களுக்குத் தெரியுமா title=

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வசதியைக் கொண்டு வந்துள்ளது. இந்த வசதியின் கீழ், உங்கள் குழந்தையின் புகைப்படத்தை SBI Atm கார்டில் அச்சிடலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு வங்கி கணக்குகளைத் திறக்கிறது.

அவற்றில் குறைந்தபட்ச வைப்பு அதாவது பாலன்சின் சிக்கலும் இல்லை. SBI-ல் ஒரு குழந்தைக்காக ஒரு கணக்கைத் திறக்கும்போது, ​​பாதுகப்புக்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டிலும் குழந்தையின் புகைப்படம் அச்சிடப்படுகிறது.

இந்த வசதியை இந்த வழியில் பெறலாம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ‘முதல் படி மற்றும் முதல் முன்னேற்றம்’ திட்டத்தின் கீழ், ஏடிஎம் கார்டிலிருந்து (ATM Card) 5000 ரூபாயை எடுக்கவும், அதே அளவிற்கான ஷாப்பிங் செய்யவும் வசதி அளிக்கப்படுகிறது. குழந்தையின் புகைப்படம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட ஏடிஎம் அல்லது டெபிட் கார்டில் இருக்கும். இந்த கார்ட் குழந்தை மற்றும் குழந்தையின் பெற்றோரின் பெயரில் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் கணக்கைத் திறக்க இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு குழந்தை அல்லது மைனரும் தங்கள் பெற்றோருடன் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். மேலும், இந்த கணக்கை குழந்தையுடன் பெற்றோருடன் இயக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் பெயரில் மட்டுமே கணக்கைத் திறக்க முடியும். இந்த கணக்கின் செயல்பாடு கணக்கு திறக்கப்பட்ட குழந்தையால் மட்டுமே செய்யப்படும். இந்த கணக்கைத் திறக்க KYC அவசியம்.

10 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்திருக்க முடியும்

குழந்தைகளுக்காக திறக்கப்பட்ட இந்த கணக்குகளில் அதிகபட்சமாக ரூ .10 லட்சம் வரை இருப்பு வைக்கலாம். இதை விட அதிக பணம் வைத்திருக்க அனுமதி இல்லை. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு பரிவர்த்தனை வரம்பு ரூ .5000 ஆகும். இதன் கீழ், ஒரு நபர் பில் கட்டணம், வங்கிகளுக்கு இடையிலான நிதி பரிமாற்றம் (NEFT மட்டும்) மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் ஆகிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கணக்கின் கீழ் 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகம் வழங்கப்படுகிறது.

இந்த கணக்கின் கீழ் 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகம் வழங்கப்படுகிறது. இந்த காசோலை புத்தகம் குழந்தையின் பெயரில் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. குழந்தை கையெழுத்திட முடிந்தால் மட்டுமே இது வழங்கப்படுகிறது.

ALSO READ: 15 sec-க்குள் வட்டியற்ற கடனில் பொருட்களை வாங்கலாம்: முழு விவரம் உள்ளே

ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு வசதி இதில் வழங்கப்படுகிறது

ஏடிஎம் கம் டெபிட் கார்டு வசதி இந்த கணக்குகளில் வழங்கப்படுகிறது. குழந்தையின் புகைப்படமும் கார்டில் இருக்கும். இது குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பெயரில் வெளியிடப்படுகிறது. இந்த கார்டிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ .5000 ஆகும். இந்த கணக்கிலிருந்து குழந்தைகள் 2000 ரூபாய் வரை பண பரிவர்த்தனை அல்லது டாப்-அப்-பும் செய்யலாம். இந்த இரண்டு கணக்குகளிலும் கிடைக்கும் வட்டி (4 சதவீதம்) சேமிப்புக் கணக்கிற்கு சமமாகும்.

இந்த வங்கிக் கணக்கில், குழந்தைகளுக்கு நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம் கார்ட், காசோலை புத்தக வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த கணக்கில் 2 வகைகள் உள்ளன: ஒரு கணக்கு 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கானது. மற்றொரு கணக்கு, கையெழுத்திடக்கூடிய 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கானது.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News