உங்கள் SBI ATM அல்லது Debit Card தொலைந்து விட்டதா? இந்த வழியில் block அல்லது reissue செய்யலாம்!!

SBI, ஒரு ட்வீட்டில், வாடிக்கையாளர்களுக்கு, டெபிட் கார்டை தொலைத்து விட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2020, 04:22 PM IST
  • SBI-ல் எளிமையாக உங்கள் டெபிட் கார்டை பிளாக் அல்லது Reissue செய்யலாம்.
  • SBI இதற்கான கட்டணமில்லா எண்களை வெளியிட்டுள்ளது.
  • இதற்கான செயல்முறை மிகவும் எளிமையானது.
உங்கள் SBI ATM அல்லது Debit Card தொலைந்து விட்டதா? இந்த வழியில் block அல்லது reissue செய்யலாம்!! title=

புதுடில்லி: இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை காலத்தில், ATM அல்லது டெபிட் கார்டு இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட சாத்தியமில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இந்த நேரத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் பல பணிகளை செய்கிறோம். எனவே, நமது ATM கார்டுகளை நாம் கவனமாக வைத்திருக்க வேண்டும். கார்டை நாம் இழந்துவிட்டால், அல்லது தொலைத்து விட்டால், அது நமக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகின்றது.

ஒருவேளை, நீங்கள் SBI-ன் ATM அல்லது டெபிட் கார்டை இழந்தால், புதிய கார்டை எவ்வாறு பெறுவது? நீங்கள் அதை இழந்தாலோ அல்லது தவறாக எங்காவது வைத்து விட்டாலோ அதை பிளாக் செய்ய என்ன செய்ய வேண்டும்?

SBI Card, ஒரு ட்வீட்டில், வாடிக்கையாளர்களுக்கு, டெபிட் கார்டை தொலைத்து விட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி தெரிவித்துள்ளது.

“உங்கள் டெபிட் கார்டை பிளாக் செய்வதும் மறு வெளியீடு (Reissue) செய்வதும் எளிமையானது. உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எங்கள் கட்டணமில்லா எண்களை டயல் செய்து, கார்டைத் பிளாக் செய்து ரீ இஷ்யூ செய்வதற்கான கோரிக்கையை இடுங்கள். எங்கள் கட்டணமில்லா எண்கள்: 1800 112 211 அல்லது 1800 425 3800” என்று SBI ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

SBI-ன் படி, தங்கள் SBI ATM அல்லது டெபிட் கார்டை (Debit Card) இழந்த வாடிக்கையாளர்கள், 1800 425 3800 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்தோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்றோ அல்லது மொபைல் செயலி மூலமோ ரீ இஷ்யூவைக் கோரலாம்.

ALSO READ: இந்த அரசு திட்டம் மூலம் எளிதில் கடன் பெறலாம்: திட்டத்தின் கால அளவு நீட்டிக்கப்பட்டது!!

இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

1.அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbicard.com –க்கு செல்லவும்.

2.’Request’ பட்டனை கிளிக் செய்யவும்.

3.அதன் பிறகு ‘Reissue/Replace Card’ ஐ கிளிக் செய்யவும்.

4.கார்ட் எண்ணை செலக்ட் செய்யவும்.

5.’Submit’ பட்டனை கிளிக் செய்யவும்.

SBI Debit Card-ஐ திரும்பப் பெற இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

1.Sbicard மொபைல் செயலியில் உள்நுழையவும்.

2. மேல் இடது பக்கம் உள்ள ’Menu Tab’-ல் tap செய்யவும்.

3.’Service Request’-ல் tap செய்யவும்.

4. ‘Reissue/Replace Card’ ஐ tap செயவும்.

5. கார்ட் எண்ணை செலக்ட் செய்யவும்.

6. ‘Submit’-ல் tap செய்யவும்.

ALSO READ: Union Bank வழங்கும் அற்புத offers: Home loan rates குறைந்தன, செயலாக்கக் கட்டணம் இல்லை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News