SBI Interest Certificate: ஸ்டேட் பாங்க் ஆப் (SBI) இந்தியா தனது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த நிவாரணம் அளித்துள்ளது. வங்கி தனது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி (Home Loan Interest Certificate) சான்றிதழை வீட்டிலிருந்து பெரும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சில எளிய முறைகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான செயல்முறை என்ன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
வருமான வரியின் (Income Tax) கீழ் வீட்டுக் கடன் வட்டிக்கு தள்ளுபடியைக் கோர வீட்டு கடன் வட்டி சான்றிதழ் மிகவும் அவசியமாகும். முதலில் இந்த சான்றிதழை பெற வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில எளிதான படிகள் மூலம் சான்றிதழின் PDF பதிப்பை இணைய வங்கி மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
ALSO READ | முக்கியமான 4 விதிகளை மாற்றிய SBI... தண்டனையிலிருந்து தப்ப இதை படியுங்கள்!!
நீங்கள் எஸ்பிஐ (SBI Customers) வாடிக்கையாளராக இருந்து இணைய வங்கியைப் பயன்படுத்தி வீட்டுக் கடன் வட்டி சான்றிதழை பெறலாம்.
முதலில் நீங்கள் வீட்டுக் கடன் வட்டி சான்றிதழுக்காக உங்கள் onlinesbi.com கணக்கில் உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு, நீங்கள் "மின் சேவைகள்" தேர்ந்தெடுக்க வேண்டும்.
ALSO READ | SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி, இந்த கட்டணங்களை ரத்து செய்தது வங்கி
மின் சேவைகள் தளத்திற்கு சென்ற பிறகு, நீங்கள் "எனது சான்றிதழ்" விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் உங்கள் வீட்டுக் கடன் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு, வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ் தானாகவே உங்கள் முன் திரையில் தோன்றும். இந்த சான்றிதழின் PDF ஐ நீங்கள் பதிவிறக்கலாம்.