சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 என்ற நிலையை எட்டியது. இந்த நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. சிறிது நேரத்திலேயே இந்த மதிப்பு மேலும் சரிந்து 69 என்ற நிலையை எட்டியது.
இந்த நிலையானது இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூன் 19-ம் தேதி அன்று 68.61 என்ற அளவிற்கு சரிந்தது மிகப் பெரிய சரிவாக கருதப்பட்டது.
தற்போது இந்த நிலை இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.61 ஆக இருந்தது தற்போது இது 69 என்ற நிலையை எட்டியது. 2018 ம் ஆண்டில் இது வரை இந்திய ரூபாய் மதிப்பு 8 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.