Royal Enfield Meteor 350 விலை உயர்வு, புதிய விலை என்ன?

Royal Enfield Meteor 350 Price: முன்னதாக இந்த பைக்கின் விலை ஏப்ரலில் உயர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மீண்டும் விலை குறைக்கப்பட்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2022, 04:50 PM IST
  • Meteor 350 மூன்று புதிய வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த பைக் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஜே-சீரிஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • Meteor 350-ன் விலை 5000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
Royal Enfield Meteor 350 விலை உயர்வு, புதிய விலை என்ன? title=

நீங்கள் விரைவில் புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 மோட்டார்சைக்கிளைப் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தியை முதலில் படியுங்கள். அதன்படி ராயல் என்ஃபீல்டு அதன் ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 மோட்டார்சைக்கிலின் விலையை உயர்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மீண்டும் அதன் விலை குறைக்கப்பட்டது. இதற்குக் காரணம் எண்ணெவென்றால் ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 பையில் இருந்து சிப் இல்லாததால் ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் கைவிடப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 விலையில் அதிகரிப்பு தவிர, மூன்று புதிய வண்ண விருப்பங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி இப்போது ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 மொத்தம் 13 வண்ணங்களில் கிடைக்கும். விலையை உயர்த்திய பிறகு, இப்போது அதன் ஆரம்ப விலை 2,05,844 ஆகும். ராயல் என்ஃபீல்டு ஜே-சீரிஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஹண்டர் 350 ஐ ஆகஸ்ட் 2022 இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ

மாறுபாடு வாரியான விலை உயர்வு
ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 பைக்கின் ஃபயர்பால் ரெட், மஞ்சள், நீலம் மற்றும் மேட் கிரீன் வகைகள் இப்போது ரூ.2,05,844க்குக் கிடைக்கின்றன, இது முந்தைய விலையான ரூ.2,01,253ஐ விட ரூ.3591 அதிகமாகும். இது தவிர, ஸ்டெல்லர் ப்ளூ, ரெட் மற்றும் பிளாக் வகைகளில் ரூ.4591 அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை ரூ.2,11,924 ஆகும். ஸ்டெல்லர் ப்யூர் பிளாக் கஸ்டம் இப்போது ரூ.2,11,924 ஆக உள்ளது, அதன்படி ரூ.2754 இதில் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர்நோவா பிரவுன், ப்ளூ மற்றும் ரெட் வகைகள் முன்பு ரூ.2,17,469க்கு விற்கப்பட்டன, இப்போது ரூ.4,592 விலை உயர்வுக்குப் பிறகு ரூ.2,22,061க்கு விற்கப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 பைக் ஓட்டுவதற்கு வசதியானது
ராயல் என்ஃபீல்டு மீட்டர் 350 கடந்த 2020 ஆண் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் நிறுவனத்தின் புரட்சிகர "ஜே" கட்டமைப்பை இந்த பைக் அடிப்படையாகக் கொண்டது. இது குறைந்த உயர சீட், அதிக ஹேண்டில்பார் மற்றும் முன் ஃபுட்பெக்குகளைப் பெறுகிறது, இது வசதியான சவாரி அனுபவத்தை வழங்குகிறது. இது தவிர, பைக்கில் கிமீ/எச் மற்றும் மைல் மதிப்பெண்கள் கொண்ட அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் 8 டெல்-டேல் எல்இடிகளுடன் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த பைக்கில் சர்வீஸ் ரிமைண்டர், ஃப்யூவல் லெவல் பார், கடிகாரம், கியர் இன்டிகேஷன் மற்றும் எகோ இன்டிகேட்டர் போன்ற அம்சங்களையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Used Cars: நம்ப முடியாத விலையில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை, முந்துங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News