கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது; எந்த இந்திய நிறுவனமும் எட்டமுடியாத இலக்காகு என முகேஷ் அம்பானி புகழாரம்!!
மும்பை: இந்தியப் பொருளாதார மதிப்பு 2030 ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் 42-வது பொதுக்குழுவில் உரையாற்றினார். ஜியோ செல்பேசி நிறுவனத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை 34 கோடியாக உயர்ந்துள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களுக்குள் ஜியோ கண்ணாடி இழை தொலைத்தொடர்பு பணி நிறைவடையும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜியோவில் 10 லட்சம் பேர் இணைந்து வருவதாகவும் முகேஷ் அம்பானி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய முகேஷ் அம்பானி, 'ஜியோ ஃபைபர்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் நடைமுறைக்கு வரும் என்றார். ஜியோ ஃபைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தாத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RIL Chairman&MD,Mukesh Ambani: 80% cost of running a start-up goes towards cloud&connectivity infrastructure. Jio is ready to take away that cost by making cloud and connectivity infrastructure absolutely free for start-ups. Our intention is to start this service from 1 Jan, 2020 pic.twitter.com/J4eqTD7cTB
— ANI (@ANI) August 12, 2019
அதேபோல் ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் மூலம் இணையதள சேவை, டிவி கேபிள் சேவை, தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட மூன்று சேவைகளையும் ஒரே வயர் மூலமாக வீடுகளுக்கு கொண்டு சென்று ஜியோ ஃபைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.