Jio வழங்கும் ரீசார்ஜ் கடன்: பண செலுத்தாமல் 5 முறை ரீசார்ஜ் செய்யலாம்

ஜியோ வழங்கும் இந்த சிறந்த சலுகையின் கீழ், நீங்கள் பணம் ஏதும் செலுத்தாமல் 5 முறை ரீசார்ஜ் செய்யலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2021, 06:38 PM IST
Jio வழங்கும் ரீசார்ஜ் கடன்: பண செலுத்தாமல் 5 முறை  ரீசார்ஜ் செய்யலாம்  title=

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், இப்போது வாடிக்கையாளர்கள் 5 முறை 'கட்டணம் ஏதும் செலுத்தாமல்' ரீசார்ஜ் செய்ய முடியும். இது ஒரு அவசர தரவு கடன் சேவையாக (Emergency Data Loan)இருக்கும், இது பயனர்கள் தினசரி தரவு வரம்பு தாண்டிவிட்டால். பயன்படுத்தலாம். இதன் மூகம் அதிவேக தரவு அனுபவத்தை எந்த தடங்கலும் இல்லாமல் அனுபவிக்கலாம்.

1 பேக்கின் விலை 11 ரூபாய் மட்டுமே

இந்த சேவை தினசரி  பெறும் 4 ஜி இணையத் தரவவை பயன்படுத்தும், பயனர்களுக்கு சிறப்பாக வழங்கப்படுகிறது. அத்தகைய வாடிக்கையாளர்கள் இப்போது அதிவேக தினசரி தரவுக்காக கொடுக்கப்பட்ட தரவு அளவு தீர்ந்தவுடன் உடனடியாக ரீசார்ஜ் செய்வதன் மூலம் 1 ஜிபி தரவைப் பெற முடியும். அவசர தரவுக் கடன் வசதியின் கீழ் ‘Recharge Now and Pay Later’ என்ற வசதியை அவர்கள் பெறுகிறார்கள். இந்த வசதியின் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு தலா 1 ஜிபி 5 எமர்ஜென்சி டேட்டா லோன் பேக்குகள் (ரூ .11 / பேக் மதிப்புள்ள) பெறலாம்

ALSO READ | Passport: வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?

ஜியோ அவசர தரவு கடன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பயனர்கள் இந்த சேவையை 5 முறை வரை பெறலாம். அதன் பின்னர் நீங்கள் ஒவ்வொரு பேக்கிற்கும் ரூ .11 செலுத்த வேண்டும்.

Jio செயலியின் மூலம் நீங்கள் இதை ரீசார்ஜ் செய்யலாம்

முதலில் நீங்கள் மைஜியோ (MyJio) செயலிக்கு செல்ல வேண்டும். வலை பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் மெனுவிற்கான ஆப்ஷன் இருக்கும். அதில் கிளிக் செய்க. இதற்குப் பிறகு மொபைல் சர்வீஸஸ் என்பதில், நீங்கள் Get emergency Data என்பதை ஓபன் செய்ய வேண்டும். பிறகு Proceed என்பதை கிளிக் செய்க. இங்கே Get emergency Data ஆப்ஷன் தோன்றும், அதைக் கிளிக் செய்த பிறகு, இப்போது Activate Now என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்க. உங்கள் அவசர தரவுத் திட்டம் uடனடியாக செயல்படுத்தப்படும்.

ALSO READ | Aadhaar Card: ஒரு ஆதார் அட்டை மூலம் எத்தனை புதிய SIM வாங்கலாம் என்பது தெரியுமா..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News