Fixed Deposit: நீங்கள் FD என்னும் நிலையான வைப்புத் தொகை அல்லது பிக்ஸட் டெபாஸிட் வைத்திருக்கிறீர்கள் அல்லது தொடக்க உள்ளீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியம். ரிசர்வ் வங்கி தனது விதிகளை மாற்றியுள்ளது. நிலையான வைப்புத்தொகையின் முதிர்ச்சிக்குப் பிறகும் நீங்கள் அந்த தொகையை கிளைம் செய்யவில்லை என்றால், அதற்கு கிடைக்கும் வட்டி குறையும்.
நிலையான வைப்பு (Fixed Deposit) என்றால் என்ன
நிலையான வைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வட்டியில் வங்கிகளில் வைக்கப்படும் ஒரு வைப்புத் தொகை. உங்கள் நிலையான எஃப்.டி.யின் காலம் முடிந்த பிறகும் அந்த தொகையை கிளைம் செய்யப்படாமல், அல்லது புதுப்பிக்கப்படாமல் வங்கியில் கிடந்தால், அந்த்தொகைக்கு, நிலையான வைப்பு தொகைக்கான வட்டி கிடைக்காது, சாதாரண சேமிப்பு தொகைக்கான வட்டி தான் கிடைக்கும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை
ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிலையான வைப்பு முதிர்ச்சியடைந்த பின் கிளைம் செய்யப்படாமல் இருக்கும் கணக்குகள் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிலையான வைப்புத் தொகையின் முதிர்வு தொகையின் மீதான வட்டி விகிதம் கணக்கிடப்படும் போது, அந்த நேரத்தில் அமலில் உள்ள சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான வைப்பு தொகை மீதான வட்டி விகிதம் இரண்டில், எது குறைவாக இருக்கிறதோ, அத வட்டி விகிதம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. புதிய வர்த்தக விதிகள், அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் வங்கிகள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ALSO READ | எச்சரிக்கை! ‘இந்த’ 8 Android செயலிகள் உங்கள் போனை காலி செய்து விடும்
FD தொகைக்கு எதிரான கடன் வசதி
எப்டி கணக்கிற்கு எதிரான கடனுடன் வேறு பல வசதிகளும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், கடன் தொகை எந்த அளவிற்கு இருக்கும் என்பது வங்கிகளைப் பொறுத்தது. சில வங்கிகள் 85 சதவீதம் வரையிலும், சில 90 முதல் 95 சதவீதம் வரையிலும் கடன்களை வழங்குகின்றன. பல வங்கிகள் இப்போது சிறப்பு எஃப்.டி சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதில் வாடிக்கையாளர்களுக்கு உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
ALSO READ |DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR