நாட்டின் ஏழை பிரிவினருக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பல திட்டங்களை கொண்டு வருகிறது. அவற்றில் ஒன்று பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாகும். அதன்படி உங்களளிடமும் அந்த ரேஷன் கார்டு இருந்தால், அதன் மூலம் மாதந்தோறும் அரசிடம் இருந்து இலவச ரேஷன் வாங்கினால், இந்த செய்தி உங்களுக்கு பயன்படும். உண்மையில், ரேஷன் விதிகளில் அரசாங்கம் ஒரு பெரிய மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இந்த விதிகளை அறிந்திருப்பது அவசியமாகும்.
கோதுமைக்கு பதிலாக அரிசி
மாநிலங்களில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த விநியோகம் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இப்போது இந்த திட்டத்தில் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும். இதமூலம் வரும் ஜூன் மாதம் முதல் குறைந்த கோதுமையும், அதிக அரிசியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | Ration Card: மக்களே உஷார், இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது
மூன்று மாநிலங்களில் கோதுமை கிடைக்காது
கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் மே முதல் செப்டம்பர் வரை ஒதுக்கப்படும் கோதுமை ஒதுக்கீட்டை மோடி அரசு குறைத்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, உ.பி., பீகார் மற்றும் கேரளாவில் இலவச விநியோகத்திற்கு கோதுமை கிடைக்காது. அதே சமயம் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைந்த கோதுமையும், அதிக அரிசியும் கிடைக்கும். அதேசமயம் மற்ற மாநிலங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதற்கிடையில் உ.பி.-பீகாரில் கோதுமை ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதற்குக் காரணம், கோதுமை கொள்முதல் குறைநத்து தான். இதன் போது கூடுதலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்தார். இந்த மாற்றம் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்திக்கு மட்டுமே பொறுந்தும்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்றால் என்ன
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா உதவியுடன் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR