குடியரசு தின பாதுகாப்பு எதிரொலி; முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து

குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பயணிக்கும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 25, 2023, 11:44 AM IST
குடியரசு தின பாதுகாப்பு எதிரொலி; முக்கிய வழித்தடங்களில் ரயில்கள் ரத்து title=

ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26ஆம் தேதி டெல்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் நான்கு ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது. இதனுடன், பல ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன மற்றும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள திலக் பாலத்தில் ஜனவரி 26ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனால் பல ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனுடன், பல ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டு, சில ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். உங்களுக்கும் ஜனவரி 26ம் தேதி ரயிலில் எங்காவது செல்லும் திட்டம் இருந்தால், ரயில் ரத்து, ரயில் வழி மாற்றம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Republic Day: குடியரசு தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் என்ன? இதோ முழு விவரம்

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

* 04952 புது தில்லி - காசியாபாத் சிறப்பு JCO 26.01.2023 அன்று ரத்து செய்யப்படும்.

* 04913/04912 பல்வால்-காசியாபாத்-பல்வால் சிறப்பு JCO 26.01.2023 அன்று ரத்து செய்யப்படும்.

* 04965 பல்வால்-புது டெல்லி சிறப்பு JCO 26.01.2023 அன்று ரத்து செய்யப்படும்.

* 04947 காசியாபாத் - புது தில்லி சிறப்பு JCO 26.01.2023 அன்று ரத்து செய்யப்படும்.

ரயில்களின் பாதை மாற்றம்

* 04444 புது டெல்லி-காசியாபாத் EMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்,  புது டெல்லி-டெல்லி-டெல்லி-ஷாஹ்தாரா-சாஹிபாபாத் வழியாக இயக்கப்படும்.

* 04408 ஷாகுர்பஸ்தி - பல்வால் EMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்,  படேல் நகர் - டெல்லி சப்தர்ஜங் - ஹஸ்ரத் நிஜாமுதீன் வழியாக இயக்கப்படும்.

* 04956 டெல்லி-காசியாபாத் சிறப்பு ரயில் (திலக் பாலம் வழியாக) தேவைப்பட்டால், டெல்லி-டெல்லி ஷாஹ்தாரா-சாஹிபாபாத் வழியாக திருப்பி விடப்படும்.

* 12423 திப்ருகர் டவுன் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சாஹிபாபாத் - டெல்லி ஷஹ்தாரா - டெல்லி - புது டெல்லி வழியாக திருப்பி விடப்படும்.

* 12313 சீல்டா-புது டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் தேவைப்பட்டால், சாஹிபாபாத்-டெல்லி-ஷாதாரா-டெல்லி-புது டெல்லி வழியாக திருப்பி விடப்படும்.

* 12259 சீல்டா-பிகானேர் துரந்தோ எக்ஸ்பிரஸ், தேவைப்பட்டால், சாஹிபாபாத்-டெல்லி ஷாஹ்தாரா-டெல்லி-புது டெல்லி வழியாக திருப்பி விடப்படும்.

* 12056 டேராடூன் - புது டெல்லி ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ், சாஹிபாபாத் - டெல்லி ஷஹ்தாரா - டெல்லி - புது டெல்லி வழியாக திருப்பி விடப்படும்.

* 20839 ராஞ்சி-புது டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் தேவைப்பட்டால், சாஹிபாபாத்-டெல்லி ஷாஹ்தாரா-டெல்லி-புது டெல்லி வழியாக திருப்பி விடப்படும்.

மேலும் படிக்க | திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க..! கட்டணங்கள் உயர்வு

இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும்

* 14086 சிர்சா-திலக் பாலம் எக்ஸ்பிரஸ், தேவைப்பட்டால், அணிவகுப்பு கடந்து செல்லும் வரை புது தில்லியில் நிறுத்தி வைக்கப்படும்.

* 20506 புது டெல்லி - திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், தேவைப்பட்டால், அணிவகுப்பு கடந்து செல்லும் வரை புது டெல்லியில் நிறுத்தப்படும்.

* 11078 ஜம்மு தாவி-புனே ஜீலம் எக்ஸ்பிரஸ் அணிவகுப்பு கடந்து செல்லும் வரை புது தில்லியில் நிறுத்தப்படும்.

* 5128 புது தில்லி - பனாரஸ் காசி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் அணிவகுப்பு வரை புது தில்லியில் நிறுத்தப்படும்.

* 02570 புது டெல்லி - தர்பங்கா குளோன் ஸ்பெஷல் அணிவகுப்பு வரை புது டெல்லியில் நிறுத்தப்படும்.

* 12925 மும்பை சென்ட்ரல் - அமிர்தசரஸ் பஸ்சிம் எக்ஸ்பிரஸ் அணிவகுப்பு வரை ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்தில் நிறுத்தப்படும்.

* 12033 கான்பூர் சென்ட்ரல் - புது டெல்லி சதாப்தி எக்ஸ்பிரஸ் தேவைப்பட்டால் சாஹிபாபாத்தில் நிறுத்தப்படும்.

* 12581 பனாரஸ் - புது தில்லி எக்ஸ்பிரஸ் தேவைப்பட்டால் காஜியாபாத்தில் நிறுத்தப்படும்.

* 20801 இஸ்லாம்பூர் - புது டெல்லி மகத் எக்ஸ்பிரஸ் தேவைப்பட்டால், காஜியாபாத்தில் நிறுத்தப்படும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News