விமானத்தில் பயணிகள் கூடுதலாக லக்கேஜ் எடுத்து செல்வதற்கு எப்படி கட்டணம் விதிக்கப்படுகிறதோ, அதேபோல ரயில்களில் கூடுதலாக லக்கேஜ் எடுத்து செல்வதற்கு கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. மேலும் முன்பதிவு செய்யாமல் பயணிகள் அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து சென்றால் அவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது. அதன்படி ஏசி முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 70 கிலோ வரை இலவசமாகவும், ஏசி 2 அடுக்குக்கு 50 கிலோ வரையும், ஏசி 3 டையர் ஸ்லீப்பர், ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் ஆகியவற்றில் 40 கிலோ வரையிலான லக்கேஜ்களை பயணிகள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுபடுகிறது.
மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்க எது சிறந்த நேரம்?
இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் 25 கிலோ வரை லக்கேஜும், அவற்றிற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30ம் செலுத்த வேண்டும். பயணிகள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் லக்கேஜ்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதும் அவர்களது லக்கேஜ்களையும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஏதேனும் குறைபாடுகள், பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்படாத லக்கேஜ்கள் முன்பதிவு மற்றும் கொண்டு செல்ல ஏற்றுக்கொள்ளப்படாது.
ரயில்வேயின் புதிய லக்கேஜ் விதிகளின்படி, சமீபத்தில் ரயில்வே அமைச்சகம் பயணிகளை அவசியமான நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் அதிக சுமை இல்லாமல் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டது. இதுகுறித்த டீவீட்டில், அதிகமான லக்கேஜ்களுடன் பயணம் செய்தால் உங்கள் மகிழ்ச்சி பாதியாகிவிடும். அதனால் குறைந்த லக்கேஜ்களுடன் பயணம் செய்யுங்கள், இல்லையெனில் பார்சல் அலுவலகத்திற்கு சென்று லக்கேஜ்களை புக் செய்யுங்கள் என்று பதிவிட்டு இருந்துது. மேலும் முன்பதிவு செய்யாமல் லக்கேஜ்களை பயணத்தின்போது கொண்டு செல்பவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல முன்பதிவு செய்யும்போது கூறிய அளவை விட பயணத்தின்போது அதிகமாக லக்கேஜ்களை எடுத்து சென்றாலும் சாதாரண கட்டணத்தை விட 1.5 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR