நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்தால் நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். கடந்த நாட்களில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அதன் வசதி மற்றும் வேகத்தால் மக்களின் விருப்பமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த ரயிலுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்திய ரயில்வே ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை இயக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் மேம்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது
200 ஸ்லீப்பர்கள் கொண்ட வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான டெண்டர்கள் இந்திய ரயில்வேயால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டெண்டரில் எக்ஸ்பிரஸின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். அதன்படி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மேம்படுத்துவதற்கான டெண்டரையும் ரயில்வே வெளியிட்டுள்ளது. டெண்டரின் கடைசி தேதி 26 ஜூலை 2022 என ரயில்வே நிர்ணயித்துள்ளது.
மேலும் படிக்க | Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ
ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் குளிரூட்டிகள் இருக்கும்
ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அனைத்து பெட்டிகளும் குளிரூட்டப்பட்டதாக இருக்கும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நடுத்தர மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும். ரயில்வே சார்பில் டெண்டர் விடப்பட்டது குறித்து, தற்போதுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மேம்படுத்தும் பணி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலை அல்லது சென்னையில் நடைபெறும் என கூறப்பட்டது.
200 ரயில்கள் தயாராக இருக்கும்
ரயில்வே வழங்கிய தகவலின் படி, முதல் ஏலத்திற்கு முந்தைய மாநாடு 20 மே 2022 அன்று நடைபெறும் என்று கூறப்பட்டது. ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டெலிவரி செய்வதற்கான காலக்கெடு 6 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் என டெண்டரில் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த காலத்திற்குள் நிறுவனம் 200 ரயில்களை தயார் செய்யும்.
16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் 1 ப்ஸ்ட் ஏசி, 4 செகண்டு ஏசி மற்றும் 11 மூன்றாம் ஏசி பெட்டிகள் இருக்கும். 20 பெட்டிகள் கொண்ட ஸ்லீப்பர் ரயிலில் முதல் ஏசி, 4 செகண்ட் ஏசி மற்றும் 15 மூன்றாம் ஏசி பெட்டிகள் பொருத்தப்படும். இந்த ரயிலின் வேகம் மணிக்கு 160 கி.மீ. ஆக இருக்கும்.
மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR