Rail tickets: பயணச்சீட்டு சலுகைகள் மீண்டும் தரப்படுமா? குழப்பத்தை தீர்த்த இந்தியன் ரயில்வே

கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக டிக்கெட் கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படும் பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், இயல்பு நிலைக்கு ரயில் சேவைகள் வரவில்லை

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2021, 11:43 PM IST
Rail tickets: பயணச்சீட்டு சலுகைகள் மீண்டும் தரப்படுமா? குழப்பத்தை தீர்த்த இந்தியன் ரயில்வே  title=

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பல்வேறு துறைகளும் வழக்கமான செயல்பாடுகளில் மாறுதல்களை செய்தன. மக்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், ஊரடங்கு விதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

கொரோனாவின் பாதிப்புக்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகளை இயக்குவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய போக்குவரத்து சாதனமான ரயில் போக்குவரத்திலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

டிக்கெட் கட்டணத்தில்மக்களுக்கு வழங்கப்படும் வழக்கமான சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கினாலும், முழுமையான இயல்பு நிலைக்கு ரயில் சேவை வரவில்லை. பிளாட்பாரம் டிக்கெட் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டது.

Also Read | ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை யாரெல்லாம் செக் பண்ண முடியாது

தற்போது சேவைகள் வழக்கம் போல மீண்டு வரும் நிலையில், முன்பு இருந்த சலுகைகள் அனைத்தையும் இந்திய ரயில்வே மீண்டும் எப்போது வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ரர்த்து செய்யப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் வழங்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் சலுகைகள் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்விக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணா பதிலளித்தார். அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், தொற்றுநோய் மற்றும் கோவிட் நெறிமுறையை கருத்தில் கொண்டு, சலுகைகள் எதையும் மீண்டும் வழங்கும் முடிவை ரயில்வே அமைச்சகம் இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

அனைத்து வகை பயணிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் (நான்கு வகை மாற்றுத்திறனாளிகள், 11 வகை நோயாளிகள் மற்றும் மாணவர்களைத் தவிர) 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. அடுத்த அறிவுத்தல்கள் வரும் வரை சலுகைகளை நிறுத்தி வைப்பதாக அப்போது ரயில்வே அறிவித்திருந்தது.  

Also Read | 7th Pay Commission: எந்தெந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தில் டி.ஏ அதிகரிப்பு

அனைத்து ரயில்களின் பயணச்சீட்டுகளிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உட்பட பல்வேறு மக்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை ரயில்வே வழங்குகிறது. மொத்தம் 51 வகையான சலுகைகளை தேசிய போக்குவரத்து நிறுவனம் மக்களுக்கு வழங்குகிறது. 

ஆசிரியர்கள், போர் விதவைகள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு வகுப்புகளில் பயணங்களை மேற்கொள்ளும்போது சலுகைகளை அனுபவிக்கிறார்கள்.

தற்போது, நான்கு வகை மாற்றுத்திறனாளிகள், 11 வகை நோயாளிகள் மற்றும் மாணவர்களைத் தவிர வேறு யாருக்கும், எந்தவித சலுகையையும் ரயில்வே தரவில்லை. கொரோனா காலகட்டத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. ஆனால், இப்போதைக்கு ரயில்வேயிடம் இருந்து மக்கள் எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.

Also Read | Govt Vacancies Available: அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கு ஏற்ற வேலை இதுவா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News