திருமணத்திற்கான மிகவும் விரும்பப்படும் தொழில்களில் வங்கி, மனிதவள, நிர்வாகம், மருத்துவர், நிதி, ஆய்வாளர், ஆலோசகர், கணக்குகள், சந்தைப்படுத்தல், பேராசிரியர் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் உள்ளது. குறிப்பாக, இந்த பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பெண் கொடுப்பது என்பது பெரும்பான்மையினரின் விருப்பமாக உள்ளது.
இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பழமையான மேட்ரிமோனி தளங்களில் ஒன்று, சமீபத்தில் நடத்திய ஆய்வில் திருமணத்திற்கான மிகவும் விரும்பப்படும் தொழில்கள் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை வெளியாகியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களின்படி, 2022இல் ஆசிரியர்களை விட மென்பொருள் வல்லுநர்கள்தான் திருமணத்திற்கு மிகவும் விரும்பப்படுபவர்களாக இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து வங்கி, மனிதவள, நிர்வாகம், மருத்துவர், நிதி, ஆய்வாளர், ஆலோசகர், கணக்குகள், சந்தைப்படுத்தல், பேராசிரியர் மற்றும் தொழில்முனைவோர் ஆகிய தொழில்களில் பணிபுரிவோர் உள்ளனர்.
மேலும் படிக்க | Saving Scheme: சுகன்யா சம்ரிதி யோஜனா...வெளியான முக்கிய அப்டேட்
30-33 வயது வரம்பில் உள்ள பயனர்கள் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது, இது திருமணத்திற்கான சிறந்த வயதை தாண்டியும், அதாவது 30 வயதைத் தாண்டிய பின்னரும் மக்கள் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 2022இல் அந்த தளத்தில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பயனர்களில் 39% பேர் 30 வயதுக்கு மேல் உள்ளனர். மக்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்கு முன்பு தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையையும், நிதிச்சுமையையும் கருத்தில் கொள்கின்றனர். இது தவிர, இரண்டாம் தர மற்றும் மூன்றம் தர நகரங்களின் பங்கேற்பு 2022இல் உயர்ந்தது. 41% பயனர்கள் மூன்றாம் தர நகரங்களில் இருந்தும், 28% இரண்டாம் தர நகரில் இருந்து வந்துள்ளனர்.
"2022 வணிக வளர்ச்சியின் ஆண்டாக மட்டுமல்லாமல், பல மனங்களையும் சேர்த்து வைக்கும் ஆண்டாக இருந்தது. எங்கள் தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று EVP தளத்தின் தலைவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில்,"எங்கள் பரந்த சேவைகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகம், இருப்பிடம் மற்றும் வருமானம் உட்பட 20-க்கும் மேற்பட்ட பில்டர்கள், சரிபார்க்கப்பட்ட லட்சக்கணக்கான ப்ரோபைல்களுடன் எங்கள் இயங்குதளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதையும், சரியான பொருத்தத்தைக் கண்டறிய அவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | நீங்களே சமைத்து சாப்பிடுங்கள்... கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ