நீங்களும் தபால் அலுவலகத்தின் வாடிக்கையாளராக இருந்தால், அங்கு உங்களுக்காக பெரிய வசதி ஒன்று செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இதைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இப்போதே தெரிந்து கொள்ளுங்கள். தபால் நிலையத்தில் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இப்போது தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு நிதி பரிமாற்றத்தையும் செய்யலாம். NEFT மற்றும் RTGS ஆகிய வசதிகள் அஞ்சல் துறை மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு NEFT வசதி
தபால் நிலையத்தில் NEFT வசதி மே 18ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில், RTGS வசதியும் மே 31ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதாக தபால் துறை தெரிவித்துள்ளது. அதாவது, இனி தபால் நிலைய வாடிக்கையாளர்களுக்கு RTGS வழியாகவும் பணம் அனுப்பும் வசதி கிடைக்கும். இதனுடன்,மற்ற வங்கிகளைப் போலவே போஸ்ட் ஆஃபீஸூம் வாடிக்கையாளர்களின் பிரதான பணப்பரிமாற்றத்துக்கான தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய செய்தி: தீபாவளி பரிசாய் வந்த அரசின் அறிவிப்பு
பணம் அனுப்புவது எளிது
அனைத்து வங்கிகளும் NEFT மற்றும் RTGS வசதிகளை வழங்குகின்றன. இப்போது தபால் நிலையமும் இந்த வசதியை வழங்குகிறது. NEFT மற்றும் RTGS மூலம் மற்றொரு கணக்கிற்கு பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது. இதன் மூலம் விரைவாக பணப் பரிமாற்றம் செய்யலாம். அவர்கள் மின்னணு முறையில் நிதி பரிமாற்றம் செய்யலாம். இதற்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. NEFT-ல் பணப் பரிமாற்றத்திற்கு வரம்பு இல்லை. அதேசமயம் RTGS-ல் நீங்கள் ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும்.
எவ்வளவு செலவாகும் தெரியுமா?
இதற்கு நீங்கள் சில கட்டணங்களையும் செலுத்த வேண்டும். நீங்கள் NEFT செய்தால், இதில் ரூ.2.50 + ஜிஎஸ்டி ரூ.10 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரூ.5 + ஜிஎஸ்டி. அதே நேரத்தில், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை, ரூ.15 + ஜிஎஸ்டி மற்றும் 2 லட்சத்துக்கு மேல் ரூ.25 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Union Bank Of India வங்கியில் வேலை வாய்ப்பு - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ