புதுடெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.1 சதவீத வட்டி வழங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சனிக்கிழமை ஒரு மனதாக வாக்களித்துள்ளது. இன்று நடைபெற்ற இபிஎஃப்ஓ இன் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இபிஎஃப்ஓ வாரியம் 2020-21 நிதியாண்டிற்கு 8.5 சதவீத வட்டி விகிதத்திற்கான பரிந்துரையை இறுதி செய்தது. மத்திய தொழிலாளர் அமைச்சரின் தலைமையில் செயல்படும் CBT, வணிக மற்றும் பணியாளர் தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இந்த அமைப்பு வட்டி விகித முன்மொழிவை தீர்மானிக்கிறது. பின்னர் நிதி அமைச்சகம் இந்த பரிந்துரையை அங்கீகரிக்கிறது.
கோவிட் தாக்கத்தால் குறிப்பிடத்தக்க அதிகப்படியான தொகை பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட போதிலும், 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான பிஎஃப் டெபாசிட் வட்டி விகிதத்தை 8.5 ஆகவே இபிஎஃப்ஓ வைத்திருந்தது. 2019-20 ஆம் நிதி ஆண்டின் வட்டி விகிதமும் 8.5 சதவிகிதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பிஎஃப் சந்தாதாரர்கள் அதிக அளவில் தொகையை எடுத்ததாலும், வரவும் குறைந்து போனதாலும், இபிஎஃப்ஓ அமைப்பு நெருக்கடியான சூழலை சந்தித்தது. டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி முன்பண வழங்கல் முறையின் கீழ் ரூ.14,310.21 கோடி மதிப்பிலான 56.79 லட்சம் கிளெயிம்களுக்கு இபிஎஃப்ஓ தொகைகளை வழங்கியுள்ளது.
பல ஆண்டுகளாக, நிதி அமைச்சகம், ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் இபிஎஃப்ஓ-வின் வட்டி விகிதங்களைப் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது. பொது வட்டி விகித சூழலுக்கு ஏற்ப அதை 8 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியது. அனைத்து சேமிப்பு விருப்பங்களிலும் இபிஎஃப்ஓ விகிதம் மிக அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுசேமிப்பு விகிதங்கள் 4% முதல் 7.6% வரை உள்ளன. பொதுவான சந்தை விகிதங்கள் குறைக்கப்பட்ட போதிலும் சமீபத்திய காலாண்டுகளில் இவை நிலையாக இருந்துள்ளன.
நிதி அமைச்சகம் 2019-20 வட்டி விகிதத்தையும் 2018-19 இல் இருந்த 8.65 சதவீத வட்டி விகிதத்தையும், அத்துடன் IL&FS மற்றும் பிற சிக்கல் நிறுவனங்களில் இபிஎஃப்ஓ-க்கு உள்ள வெளிப்பாட்டையும் கேள்வி எழுப்பியது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR