நம்மில் சில பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய சவால், குழந்தைகலை தயார் செய்து ஸ்கூலுக்கு அனுப்புவது தான். சில குழந்தைகள் காலையில் எழுந்திருப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். குழந்தைகளை வலுக்கட்டாயமாக எழுப்பி பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நிலை பலர் வீட்டில் காணலாம். உங்கள் குழந்தையும் பள்ளிக்கு சரியான நேரத்தில் தூங்கி எழுந்து கிளம்பவில்லை என்றால், நீங்கள் கீழ்கண்டமுறைகளை பின்பற்றலாம்.
குழந்தையை பள்ளிக்கு செல்ல எழுப்புவதற்கான வழிகள்:
1. உங்கள் குழந்தை அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், இதற்காக குழந்தைக்கு போதுமான நல்ல தரமான தூக்கம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் அவர் எந்த சிரமமும் இல்லாமல் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியும். எனவே, குழந்தைகளை முடிந்த அளவு சீக்கிரம் தூங்கச் செய்யுங்கள்
2. பல சமயங்களில் குழந்தைகள் காலையில் எழுந்திருக்க படுத்தும் போது, பெற்றோர்கள் அவர்களைக் கடிந்து கொள்ள (Parenting Tips) ஆரம்பித்து விடுவார்கள். இதை நிச்சயம் செய்யக்கூடாது. எப்போதும் பொறுமையாக, அமைதியாக, அன்பு வார்த்தைகளை கூறி எழுப்பு முயலுங்கள். இதைச் செய்வது அவர்களின் நாளை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் தொடங்க உதவும். திட்டிக் கொண்டே இருந்தால் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள்.
3. குழந்தைகளுக்கான தினசரி வழக்கத்தை சீர் செய்யவும். தூங்கும் மற்றும் எழுந்திருக்கும் நேரம் நிர்ணயித்து, அதனை கடைபிடிக்கச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் வழக்கத்தைப் புரிந்துகொண்டு ஒழுக்க கடைபிடிக்க பழகிக் கொள்வார்கள்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தைக்கு படிப்பில் கவனம் இல்லையா... ‘இந்த’ மூளை விளையாட்டுகள் உதவும்..!!
4. குழந்தைகளை எழுப்ப மற்றொரு வழி உள்ளது. இது பெரும்பாலான பெற்றோரால் கடைபிடிக்கப்படுகிறது. நீங்கள் அறையின் ஏசி அல்லது குளிரூட்டி, பேனை அணைக்க வேண்டும். இதன் காரணமாக, அறை சிறிது நேரத்தில் வெப்பமடைந்து, அதன் காரணமாக அவர் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
5. குழந்தையின் அறையில் சூரிய ஒளி அல்லது இயற்கை ஒளி இருந்தால், அவரை எழுப்ப அறையின் திரைச்சீலைகளைத் திறக்கவும். இது இயற்கையான ஒளி அறைக்குள் நுழைவது குழந்தைகளை எழுப்ப உதவும்.
குழந்தையின் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்
வீட்டில் அதிக சத்தம் இருந்தால், அருகில் படுத்திருக்கும் பெற்றோர்கள் சத்தமாக குறட்டை விடுதல், அதிக வெளிச்சம், மிகவும் தாமதமாக படுக்கைக்குச் செல்வது, அறையின் வெப்பநிலை, படுக்கை வாசதியாக இல்லாத நிலை, அதிக சோர்வு, படுக்கைக்கு முன் டிஜிட்டல் திரையில் நேரத்தை செலவிடுதல், மாலையில் காஃபின் உட்கொள்வது மற்றும் படுக்கை நேரத்தில் இனிப்புகள், அல்லது இரவில் பய உணர்வு அதிகமாக இருப்பது போன்ற விஷயங்கள் குழந்தைகளின் தூக்கத்தின் தரத்தை பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், குழந்தையை அவர் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணரும் இடத்தில் தூங்கச் செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE Media இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் குழந்தைக்கு படிப்பில் கவனம் இல்லையா... ‘இந்த’ மூளை விளையாட்டுகள் உதவும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ