ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யணுமா? ஆன்லைனிலேயே செய்யலாம்

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ரயில் டிக்கெட்டையும் ஆன்லைனில் வழியாக வீட்டில் இருந்தபடியே நீங்கள் ரத்து செய்ய முடியும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 9, 2022, 02:15 PM IST
  • பலரின் ஆன்லைன் ரயில் டிக்கெட்டை ரத்து செய்வது எப்படி?
  • ஐஆர்சிடி இணையதளத்தில் அதற்கான வழிமுறை உள்ளது
ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யணுமா? ஆன்லைனிலேயே செய்யலாம் title=

Online Train Ticket Cancellation: சுற்றுப் பயணம் அல்லது வெளி ஊர்களுக்கு திட்டமிடும் பலரும் கடைசி நேர சூழல் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாமல் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அத்தகைய சூழலில் ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகையை ஐஆர்சிடிசி திரும்ப கொடுக்கும். 

சிலருக்கு ஒட்டுமொத்தமாக புக் செய்த டிக்கெட்டுகளை எப்படி கேன்சல் செய்வது அல்லது ஒரு குழுவில் இருக்கும் ஒருவரின் டிக்கெட்டை மட்டும் எப்படி கேன்சல் செய்வது? என்ற சந்தேகம் இருக்கிறது. ஐஆர்சிடிசியில் அதற்கான ஆப்சன் இருக்கிறது. ஒரு குடும்ப பயணத்தில் ஒரு குறிப்பிட்ட சில நபர்களின் அல்லது ஒரு சிலரின் டிக்கெட்டை மட்டும் கேன்சல் செய்ய முடியும்.  

ஐஆர்சிடிசி வெப்சைட்

முதலில், உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் IRCTC இ-டிக்கெட் இணையதளத்துக்கு செல்லுங்கள். சரியான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். இப்போது டிக்கெட்டை ரத்து செய்ய, 'MY Transactions' என்பதற்குச் சென்று, 'MY Account மெனுவிற்குச் செல்ல வேண்டும். அதில் Booking Ticket History என்பதைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் தகவலைப் பார்ப்பீர்கள். இப்போது நீங்கள் ரத்து செய்ய விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து, 'கேன்சல் டிக்கெட்' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!

பணத்தை திரும்ப பெறலாம்

'கேன்சல் டிக்கெட்' என்ற விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ரத்து செய்ய விரும்பும் பயணிகளின் பெயரைத் தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் உறுதிப்படுத்தலுக்கு 'சரி' என்பதைக் கிளிக் செய்யவும். ரத்துசெய்தல் முடிந்ததும், ரத்துசெய்த தொகையைக் கழித்த பிறகு டிக்கெட் பணம் உங்கள் கணக்கில் திருப்பித் தரப்படும். எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலிலும் இதற்கான உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ்அப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News