புதுடெல்லி: தற்போது நிலவும் கோவிட் தொற்றுநோய் மற்றும் ஓமிக்ரான் வைரஸின் தாக்கம் காரணமாக, மத்திய அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதா? இதற்கு முன்னர் கொரோனா பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் முடக்கப்பட்டது போல, மீண்டும் முடக்கப்படுமா?
அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் நிறுத்தப்பட்டிள்ளது என்ற ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது அரசு ஊழியர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னால் உள்ள விவரத்தைக் காணலாம்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பற்றி வைரலாகும் இந்த செய்தி, நிதி அமைச்சம் மூலம் வழங்கப்படும் ஒரு அலுவலக குறிப்பாணை போல் தெரிகிறது. அந்தச் செய்தியில், "ஓமிக்ரான் (Omicron) தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணமும், தற்போதைய அசாதாரண சூழல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. " என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 3% DA உயர்வு
இந்த வைரலான பதிவின் பின்னணியில் உள்ள போலிச் செய்திகளைப் பற்றி விளக்கமளித்த பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB), அந்த செய்தி உண்மையில் தவறானது என்று ட்வீட் செய்துள்ளது.
PIB தனது ட்வீட்டில், அகவிலைப்படி நிறுத்தப்பட்டது பற்றி நிதி அமைச்சகம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று கூறியுள்ளது.
"மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் நிறுத்தி வைக்கப்படும்' என்று நிதி அமைச்சகத்தின் பெயரில் வெளியிடப்பட்ட போலி உத்தரவு புழக்கத்தில் உள்ளது" என்று PIB ட்வீட் செய்துள்ளது.
A #Fake order issued in the name of the Ministry of Finance claiming that the 'Dearness Allowance & Dearness Relief payable to Central Govt employees and pensioners will be kept in abeyance' is in circulation.#PIBFactCheck
No such order has been issued by the @FinMinIndia. pic.twitter.com/DnZ4IY91FF
— PIB Fact Check (@PIBFactCheck) January 3, 2022
PIB மூலம் செய்திகளின் உண்மையை சரிபார்ப்பது எப்படி
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் வந்தால், அதன் நம்பகத்தன்மையை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். அந்த செய்தி உண்மையான செய்தியா அல்லது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம்.
அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு சந்தேகத்திற்கு இடமான செய்தியை அனுப்ப வேண்டும். இது தவிர, செய்தி பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள, +918799711259 என்ற எண்ணிற்கும் ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம்.
உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி தகவல்களைப் பெறலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவல் (fact check information) https://pib.gov.in என்ற வலைத்தளத்திலும் கிடைக்கிறது.
ALSO READ | குறைந்தபட்ச மாத பென்ஷன் 9000 ரூபாயா? செம்ம ஜாலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR