பழைய ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக நாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால் இப்போது அது சிலருக்கு மட்டும் மீண்டும் இது அமல்படுத்தப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
மத்திய துணை ராணுவப் படைகள் (CAPF) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. இது ஆயுதப்படை என்பதால், இவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் பெரும் நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பெட்ரோல் கிரெடிட் கார்டுகளுக்கு மிகப்பெரிய சலுகை..! இந்த கார்டுகளை வாங்கலாம்
பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்கும்
நீதிபதிகள் சுரேஷ் கைட் மற்றும் நினா பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு 82 மனுக்கள் மீது தீர்ப்பளித்தனர். ஆயுதப் படைகளில் இன்று பணியில் சேர்ந்தாலும், முன்னர் பணியில் சேர்ந்திருந்தாலும், வரும் நாட்களில் சேர்ந்தாலும், அவர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய வரம்புக்குள் வருவார்கள் என நீதிமன்றம் கூறியுள்ளார்கள்.
மத்தியப் படைகளுக்கு அதிக நிவாரணம் கிடைத்தது
இந்த முடிவின் விரிவான நகல் இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆனால் அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்தின் இந்த முடிவு மத்திய படைகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் அளிக்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினால், அதன் காரணமாக ஓய்வூதியமும் உயர்த்தப்படுகின்றது.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
இத்திட்டத்தில், பணி ஓய்வு பெறும் போது, சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வழங்கப்பட்டுகிறது. இத்திட்டத்தில், பணியாளர்கள் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், விதிகளின்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் இருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ