இந்தியன் வங்கி கர்ப்பிணிப் பெண்ணை தகுதியற்றவராகவும், அத்துடன் அவர்களை தற்காலிகமாக பணிக்கு தகுதியற்றவராகவும் அறிவித்துள்ளது. இதற்கு டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) அதன் வழிகாட்டுதல்களை திரும்பப் பெறுமாறு வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, 3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் எந்தவொரு பெண்ணும் தற்காலிகமாக வேலைக்குத் தகுதியற்றவர். அத்துடன் கர்ப்பிணிப் பெண் பிரசவமாகி 6 வாரங்களுக்குப் பிறகு, மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என்றும், அதில் பொருத்தமாக இருந்தால் மாட்டுமே அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் என்றும் இந்தியன் வங்கி தெறித்து இருக்கிறது.
மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!
எஸ்பிஐயும் உத்தரவு பிறப்பித்துள்ளது
முன்னதாக கடந்த ஜனவரியில், எஸ்பிஐயும் இதுபோன்ற உத்தரவுகளை வழங்கியது. இருப்பினும், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் டெல்லியின் மகளிர் ஆணையம் உட்பட சமூகத்தின் பல பிரிவுகள் இந்த விதியை ரத்து செய்யக் கோரி தெரிவித்ததுடம், இது பெண்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து எஸ்பிஐ இந்த விதியை குளிர்சாதனக் கிடங்கில் வைக்க வேண்டியதாயிற்று. மேலும் சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆட்சேர்ப்பு தொடர்பான புதிய அறிவுறுத்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வங்கி கூறியிருந்தது.
பாரபட்சமான மற்றும் சட்டவிரோதமானது
இந்தியன் வங்கியின் இந்த நடவடிக்கை "பாரபட்சமானது மற்றும் சட்டவிரோதமானது" என்று டெல்லி மகளிர் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது, ஏனெனில் இது 'சமூக பாதுகாப்பு குறியீடு, 2020' இன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளுக்கு எதிரானது. மேலும் இது போன்ற செயல் பாலின அடிப்படையிலான பாகுபாடு என்றும், அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் டெல்லி மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளதாக டெல்லி மகளிர் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையம் தலைவரின் அறிக்கை
முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பெண்களை பணி நியமனம் செய்வதை நிறுத்தி வைத்து வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் உத்தரவால் அந்த பெண்கள் பிரசவம் ஆன உடனே சேர முடியாத நிலை ஏற்படும் என்றும் இதனால் அவர்களின் சீனியாரிட்டி குறையும் என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஜூன் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு வங்கியைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் தலையிட வேண்டும் என்று மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, இனி அதிக லாபம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR