NIA Recruitment: தேசிய புலனாய்வு துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய புலனாய்வு துறையில் காலியாகவுள்ள 46 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 5, 2022, 11:23 AM IST
  • தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.
  • 1,42,000 வரை சம்பளம் பெற வாய்ப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022 ஆகும்.
NIA Recruitment: தேசிய புலனாய்வு துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! title=

NIA Recruitment  2022: தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) பிரிவு அதிகாரி/அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர், கணக்காளர், ஸ்டெனோகிராபர் கிரேடு-I மற்றும் அப்பர் டிவிஷன் கிளார்க் (யுடிசி) பதவிகளுக்கு டெபுடேஷன் அடிப்படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 46 காலியிடங்கள் உள்ளன.  இந்தப் பதவிகளுக்கான ஊதியம் ரூ. 25500 முதல் ரூ. 142400. விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022 ஆகும்.

1) நிறுவனம் :

தேசிய புலனாய்வு துறை (NIA)

2) வேலைவகை :

அரசு வேலை 

3) காலி பணியிடங்கள் :

மொத்தம் 46 காலி பணியிடங்கள்

மேலும் படிக்க | Post office scheme: ரூ.12,000 முதலீட்டில் ரூ.1 கோடி வரை பெற அறிய வாய்ப்பு!

4) பணிகள் :

-Section Officer/ Office Superintendent – 03

-Assistant – 09

-Accountant – 01

-Stenographer Grade-I – 23

-Upper Division Clerk (UDC) – 12

5) பணிக்கான தகுதிகள் :

Section Officer/ Office Superintendent – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்  மற்றும் சொல் செயலாக்கம், ஸ்ப்ரெட் ஷீட், ஸ்லைடு உருவாக்கம் ஆகியவற்றில் கம்ப்யூட்டர் திறமையை கேடர் கட்டுப்பாட்டு ஆணையத்தால் சான்றளிக்க வேண்டும்.

Assistant – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்  மற்றும் கணினி இயக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

Accountant – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஒழுங்கமைக்கப்பட்ட கணக்குத் துறை அல்லது மத்திய அரசு நடத்தும் துணைக் கணக்குச் சேவை (SAS) தேர்வில் தேர்ச்சி I அல்லது இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ரடேரியல் டிரெய்னிங் அண்ட் மேனேஜ்மென்ட்டில் (ISTM) ரொக்கம் மற்றும் கணக்குப் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான மற்றும் ரொக்கம், கணக்குகள் மற்றும் பட்ஜெட் வேலைகளில் மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Stenographer Grade-I –  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

6) சம்பளம் :

-Section Officer/ Office Superintendent –  ரூ.44,900 முதல் ரூ. 1,42,400

-Assistant – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400

-Accountant – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400

-Stenographer Grade-I – ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400

-Upper Division Clerk (UDC) – ரூ. 25,500 முதல் ரூ. 81,100

7) விண்ணப்பிக்க கடைசி தேதி :

27.08.2022

மேலும் படிக்க | இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள்.. மாத ஊதியம்: ரூ. 56900 - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News