Arranged Marriage-ல் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது..

இந்தியாவை பொறுத்தவரை இன்னும் காதல் திருமணங்களை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன. இத்திருமணத்தில் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Aug 18, 2024, 01:36 PM IST
  • Arranged Marriageல் கேட்க வேண்டிய கேள்விகள்
  • முன்கூட்டியே கேட்டுக்கொள்ள வேண்டும்
  • 10 வகையான கேள்விகள்
Arranged Marriage-ல் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்! பின்னாடி பிர்ச்சனை வராது.. title=

1.சகஜமான கேள்விகள்:

ஒருவரை முதலில் பார்த்தவுடன் சீரியஸான கேள்விகளை கேட்க தோன்றாது. எனவே, முதலில் அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக சகஜமான கேள்விகளை கேட்க வேண்டும். 

>உங்களுக்கு எந்த வகையான இசை, திரைப்படங்கள் பிடிக்கும்?
>புத்தகம் படிப்பவரா நீங்கள்?
>நாய் அல்லது பூனை வளர்க்க ஆசை இருக்கிறதா? அப்படி முன்கூட்டியே இருந்தால் அவைகளை குறித்து கேட்கலாம்.
>சமூக வலைதளம் குறித்த கேள்விகள்
>ஃப்ரீ டைமில் என்ன செய்விர்கள்?

2.திருமணம் உள்ளிட்ட உறவுகள் குறித்த கேள்விகள்:

திருமணம் மற்றும் உறவுகள் குறித்த அவரது பார்வை என்ன என்பதை தெரிந்து கொள்ள சில கேள்விகளை கேட்கலாம்.

>உங்களை பொறுத்தவரை திருமணம் என்றால் என்ன?
>திருமண உறவில் காதல் நிறைய இருக்க வேண்டுமா? மரியாதை அதிகமாக இருக்க வேண்டுமா?
>இந்த திருமணம் உங்கள் வாழ்வில் எந்த மாதிரியான மாறுதல்களை ஏற்படுத்தும்?
>திருமண உறவில் பிடித்தது என்றால் என்ன?
>திருமண உறவில் காதலை நிலைத்து நிற்க வைக்க, என்ன செய்ய வேண்டும்?
>குடும்பத்துடன் எந்த மாதிரி நேரம் செலவிட விரும்புவீர்கள்?
>திருமண உறவில் உங்களை உற்சாகப்படுத்துவது எது?
>திருமணம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா?

3.தொழில் குறித்த கேள்விகள்:

திருமண உறவில் இணையும் இருவருமே நிதி ரீதியாக சுதந்திரத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இது குறித்த கேள்விகளை இங்கு பார்ப்போம்.

>எனது வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
>இன்னும் சில ஆண்டுகளில் தொழில் ரீதியாக உங்களுக்கு இருக்கும் ப்ளான் என்ன?
>10 வருடங்கள் கழித்து இருவரது வாழ்க்கையும் எங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
>நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
>வேலைக்கு முன்னர் உறவை முதன்மை படுத்துவீர்களா?
>உங்கள் இருவருக்கும் இடையே இருவர் செய்யும் வேலைகளால் ஏதேனும் பிரச்சனை வரும் என நினைக்கிறீர்களா?
>இரவில் வேலை முடிய நேரமானால் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்.

4.குடும்பம் குறித்த கேள்விகள்:

குழந்தைகள் பற்றியும் குடும்பம் குறித்தும் பேசிக்கொள்வதும் அவசியம் ஆகும்.

>உங்களுக்கு குழந்தைகள் பிடிக்குமா?
>குழந்தைகளை கையாள தெரியுமா?
>எதிர்காலத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமென நினைக்கிறீர்கள்?
>குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
>உங்களது குழந்தை பருவம் எப்படி இருந்தது?
>உங்கள் பெற்றோருக்கும் உங்களுக்கு எந்த மாதிரியான உறவுகள் இருந்தது?
>வருங்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டால் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?
>குழந்தை பெற்ற பிறகு வேலையை விட வேண்டும் என நினைப்பீர்களா?

5.குடும்ப பிரச்சனை குறித்த கேள்விகள்:

குடும்பம் என்றால் அதில் பிரச்சனைகளும், சண்டைகளும், சச்சரவுகளும் இருக்கத்தான் செய்யும். அது குறித்த கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும், 

>உங்கள் வாழ்க்கை துணையான எனக்கு, உங்கள் குடும்பத்தில் என்ன மதிப்பு இருக்கிறது?
>திருமணத்திலும் அதற்குப் பின்னரும் இரு குடும்பங்களின் பங்கை எவ்வாறு கற்பனை செய்கிறீர்கள்?
>திருமணத்திற்கு பின்பு ஏதேனும் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டுமா?
>குடும்பத்தில் சண்டை வரும் போது என்னை விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்களா?

6.குடும்பத்தின் மதிப்புகள் மற்றும் மத நம்பிக்கைகள் பற்றிய கேள்விகள்:

>உங்கள் குடும்பத்தில் எதை மிகவும் உயர்வாக கருதுகின்றனர்?

>மதம் குறித்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதை உங்கள் குடும்பத்தினர் எப்படி கையாள்கின்றனர்?

>உங்கள் குழந்தைகளுக்கும் இது போன்ற நம்பிக்கைகளை ஊட்டி வளர்க்க வேண்டுமா?

மேலும் படிக்க | திருமண உறவில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

7.நிதி பற்றிய கேள்விகள்:

>இருவர் தரப்பிலும் ஏதேனும் கடன் இருக்கிறதா?
>வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ வேண்டுமா? சிம்பிளாக வாழ வேண்டுமா?
>பணத்தை சேமிக்க ஆசையா? செலவு செய்ய ஆசையா?
>இருவரும் சம்பாதிப்பதை தனித்தனியே வைத்துக்கொள்ள வேண்டுமா? ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டுமா?
>வீட்டு பட்ஜெட் குறித்த உங்கள் கேள்விகள்
>நிதி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் போது அதை எப்படி கையாள்வீர்கள்?

8. பாலியல் உறவு பற்றிய கேள்விகள்:

>உறவில் யாரேனும் ஒருவர் துரோகம் செய்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
>குழந்தை கட்டுப்பாடு குறித்து நீங்கள் நினைப்பது என்ன?
>செக்ஸ் விஷயத்தை அவர்களால் வெளிப்படையாக பேச முடிகிறதா என்பதை கவனித்தல்
>செக்ஸை முதன்மை படுத்துகிறாரா?

9. குடும்ப மருத்துவ வரலாறு:

>உங்கள் குடும்பத்தில் யாரேனும் போதைக்கு அடிமையாகியிருக்கிறீர்களா?
>உடல் ரீதியாக மன ரீதியாக ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?
>உங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் நலன் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்கிறீர்களா?
>உடற்பயிற்சி குறித்து உங்களின் கருத்துகள் என்ன?
>ஹெல்தியான உணவுகளை சாப்பிடுபவரா நீங்கள்?

10.வாழ்க்கை முறை குறித்த கேள்விகள்:

>வருங்காலத்தில் இடம் பெயர்தல் குறித்து யோசிததுண்டா?
>எந்த மாதிரியான வீட்டில் வாழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?
>உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ எவ்வளவு பணம் தேவை என்று நினைக்கிறீர்கள்?
>டிராவலிங் பிடிக்குமா?
>வெக்கேஷன் என்றால் உங்கள் அகராதியில் என்ன?
>வேலை நேரத்திற்கு பிறகு நீங்கள் எதை செய்ய வேண்டும் என நினைப்பீர்கள்?
>சமைக்க பிடிக்குமா? ஆர்டர் செய்ய பிடிக்குமா?

மேலும் படிக்க | பிறர் உங்களை பற்றி கிசுகிசு பேசினால் என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News