அன்னையர் தினம் 2022: உங்கள் அம்மாவுக்கு இந்த அழகான பரிசை கொடுங்கள்

Mother's Day 2022: அன்னையர் தினத்தன்று நீங்கள் ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினால், உங்கள் அம்மாவுக்கு வெண்ணிலா கேக் செய்துக்கொடுக்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2022, 09:24 AM IST
  • இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
  • அம்மாவுக்கு வெண்ணிலா கேக் செய்துக்கொடுக்கலாம்.
  • வெளியே கூட்டி செய்யலாம்.
அன்னையர் தினம் 2022: உங்கள் அம்மாவுக்கு இந்த அழகான பரிசை கொடுங்கள் title=

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது மந்திரம் இல்லை வேதமாகும். உலகில் மிகக் கடினமான பொறுப்பு தாயாய் இருப்பது தான். இந்த ‘அம்மா’ என்ற வார்த்தைக்கு மட்டும்தான் என்றும் யாராலும் ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது. ஏனெனில் இங்கு சுயநலமே கிடையாது. இங்கு அன்பு மட்டும் தான் உண்டு.

மேலும் படிக்க | அன்னையர் தினம் 2022: நம்மை அன்பு மழையில் நனைக்கும் தாயை மகிழ்விக்க சிறந்த பரிசுகள்

எனவே உங்கள் தாய்க்கு இந்த நாளில் வெளியே கூட்டி சென்று அவர்களை இயற்கையை ரசிக்கும் படி செய்யலாம். இது அவர்களுக்கு வாழ்வில் புதிய புத்துணர்ச்சியை அளிக்கும். மேலும் உங்கள் அம்மாவை இன்னுமும் ஸ்பெஷலாக உணர வைக்க வேண்டுமென்றால், உங்கள் கைகளால் ஏதேனும் சிறப்பாக செய்துக்கொடுத்து கலக்கலாம். இந்த நிலையில் இன்றைய கட்டுரையில் இன்று வீட்டில் வெண்ணிலா கேக்கை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வெண்ணிலா கேக் தேவையான பொருட்கள் -

மைதா - 2 கப்
சர்க்கரை தூள் - 1 கப்
பால் - 1 கப்
வெண்ணெய் - 1/2 கப்
ஜெல்லி - 1 தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி

வெண்ணிலா கேக் செய்முறை -

* முட்டையில்லா வெண்ணிலா கேக் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் அனைத்து மாவுகளையும் எடுத்து பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். இப்போது இந்தக் கலவையை சலிக்கவும்.
* இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள்.
* இப்போது நன்றாக கலந்து, இந்த கலவையை பீட் செய்யவும். இப்போது வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்க்கவும். அதே கலவையில் மாவு கலவையை சேர்க்கவும்.
* மற்றொரு பாத்திரத்தை எடுத்து, அதில் கொக்கோ பவுடர் மற்றும் வெண்ணெய் சேர்த்து கரையும் வரை பீட் செய்யவும்.
* இப்போது இந்த கலவையை மீதமுள்ள கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
* பின்னர் கேக் தயாரிக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெண்ணெயை தடவவும். அதில் தயார் செய்த கேக் கலவையை சேர்த்து, சுற்றிலும் பரப்பவும்.
* இப்போது இந்த பானையை மைக்ரோவேவில் சிறிது நேரம் வைக்கவும்.
* 3-4 நிமிடங்கள் நேரத்தை அமைக்கவும். சிறிது நேரம் கழித்து மைக்ரோவேவை அணைத்துவிட்டு அதிலிருந்து கேக்கை எடுக்கவும்.
* கேக் குளிர்ச்சியடையும் வரை காத்திருங்கள். பாத்திரத்தில் இருந்து இறக்கி அதன் மேல் ஜெல்லியை ஊற்றி அலங்கரிக்கவும்.
* இறுதியாக, கேக்கை உலர் பழங்களால் அலங்கரிக்கலாம்.

மேலும் படிக்க | அம்மாவின் ஆன்மா சாந்தியடைய 5 ரூபாயில் அறுசுவை உணவு வழங்கும் மகன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News