Skin Care Health Tips: வெயில், மழை, பனி என ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப உங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எப்படி உணவுமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமோ, அதேபோல உங்களின் சருமத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப சில விஷயங்களை செய்தாக வேண்டும். வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழை காலமாக இருந்தாலும், வறண்ட சூழல் என்றாலும் சரி நமது சருமம் அதன் சமநிலையை தக்கவைக்க கடுமையாக தடுமாறும். இதனால் சருமம் வறண்டு போகும், தோல் எரிச்சல் ஏற்படும். சில நேரங்களில் தோல் வெடிப்புகள் கூட ஏற்படலாம்.
இந்த சவால்களை சமாளிக்க நீங்கள் எப்போதும் சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், அதாவது தினமும்... உணவுமுறைகளில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்களோ அதேபோல் இந்த விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, சரும ஆரோக்கியத்திற்கு உணவு பழக்கவழக்கமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும். எனவே சுத்தமான உணவுகளை உட்கொள்ளுங்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இதன்மூலம், நீங்கள் இந்த பருவமழை காலத்திலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அந்த வகையில், இந்த மழைக் காலத்தில் சரும ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க | இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!
1. நீர்ச்சத்து
உடலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். போதுமான அளவுக்கு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும், ஒட்டுமொத்தமாகவும் அது சருமத்திற்கு நன்மை அளிக்கும். தினமும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். தண்ணீர் மட்டுமின்றி லெமன் ஜூஸ், தேங்காய் தண்ணீர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் வைட்டமிண்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. காலையில் எழுந்த உடன் புத்துணர்ச்சி அளிக்கும் இதுபோன்ற பானங்களை குடித்தால் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
2. வாழ்க்கை முறையில் மாற்றம்
சருமம் ஆரோக்கியமாக இருக்க உங்களின் வாழ்ககை முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருவது முக்கியமாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரையால் தயாரிக்கப்பட்ட பண்டங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். பழங்கள், காய்கறிகளை அன்றாடம் எடுத்துக்கொள்ளவும்.
3. உணவுப் பழக்கவழக்கம்
வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டுவரும் போது உணவுப் பழக்கவழக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் மழைக் காலத்திலும் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்ளலாம். அந்தெந்த சீசன்களுக்கான பழங்கள், காய்கறிகள், பாதாம் ஆகியவை உங்களின் சருமத்திற்கு நல்லது. கையளவு பாதாமை எப்போதும் உட்கொள்வது சருமத்திற்கு நல்லது. உடலுக்கும் நல்லது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன என்பதால் சருமம் ஊட்டச்சத்துடனும், நீர்ச்சத்துடனும் இருக்கும். அதில் இருக்கும் வைட்டமிண் E ஆண்டிஆக்ஸிடன்ட் வயதாகும் அறிகுறிகளை குறைந்து, உங்களை இளமையான தோற்றத்தில் வைத்திருக்க உதவும்.
4. அழுத்தத்தை குறையுங்கள்
நீங்கள் மன அழுத்தத்தை கொண்டிருக்கும் போது முதலில் அது உங்களின் சருமத்தத்தைதான் பாதிக்கும். உங்களின் மன அழுத்தத்தினாலும் சருமத்தில் அதிக பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சிகளை செய்யுங்கள். இவை உங்களின் அன்றாட மன அழுத்தத்தை குறைத்து நீண்ட கால அளவில் மன நிம்மதியை அளிக்கும். இதனால், Cortisol என்படும் மன அழுத்தம் சார்ந்த ஹார்மோனின் உற்பத்தி குறையும். இது உங்களின் சருமத்திற்கு நன்மை பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: சரும ஆரோக்கியம் சார்ந்த இந்த அனைத்து தகவல்களும் பொதுவானவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ வல்லுநரை ஆலோசிக்க வேண்டும். இந்த தகவல்களை Zee News உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | மஞ்சள் கலந்த நீரை முகத்திற்கு தடவி வந்தால் இவ்வளவு நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ