ஊரடங்கை மீறி பட்டர் சிக்கன் சாப்பிட 32Km நடந்து சென்ற இளைஞர்!!

ஆஸ்திரேலியாவில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக ஊரடங்கை மீறி 32 கி.மீ. பயணித்த நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிப்பு..!

Last Updated : Jul 20, 2020, 01:50 PM IST
ஊரடங்கை மீறி பட்டர் சிக்கன் சாப்பிட 32Km நடந்து சென்ற இளைஞர்!! title=

ஆஸ்திரேலியாவில் பட்டர் சிக்கன் சாப்பிடுவதற்காக ஊரடங்கை மீறி 32 கி.மீ. பயணித்த நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிப்பு..!

கொரோனா ஊரடங்கில் நாம் பல விஷயங்களை இழந்துள்ளோம், அதில் ஒன்று உணவு. பலரும் கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது முடிவடையும். எப்போது நாம் ஹோட்டல்களில் நமக்கு பிட்டித்ததை சாப்பிடலாம் என பலரும் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா லாக்டவுன் காலத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்ட நபர் ஒருவர் 32 கிலோ மீட்டர் போய் போலீசில் மாட்டியது மட்டுமல்லாமல் 1652 ஆஸ்திரேலியா டாலர்களை அபராதமாக கட்டியுள்ளார். 

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் ஒருவர் வெர்ரீபி பகுதியில் இருந்து மேற்கு மெல்போர்ன் பகுதிக்கு காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். எதற்கு என தெரியுமா?... வாய்க்கு ருசியாக பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் எனற ஆசை. அதற்காக ஊரடங்கு பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை 32 கிலோமீட்டர் ஹாயாக காரை ஓட்டி வந்து பட்டர் சிக்கனும் சாப்பிட்டுவிட்டு திரும்பியுள்ளார். 

ALSO READ | அன்ராயரை சிறியதாக தைத்த டெய்லர் மீது இளைஞர் வழக்கு பதிவு..!

ஆனால், வீடு திரும்பும் வழியிலேயே போலீசில் அவர் வசமாக மாட்டிக்கொண்டார். ஊரடங்கு விதிகளை அவர் மீறியதது தெரிய வந்தது.  இதனால் அவருக்கு போலீசார் ரூ.86,582 அபராதம் விதித்து உள்ளனர். ஒரு பிளேட் பட்டர் சிக்கன் சாப்பிட்ட குற்றத்திற்கு இந்தியா மதிப்பில் சுமார் 86 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். 

வார விடுமுறை நாள் என்பதால் வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றக்கிளம்பியவர்கள் எல்லாம் இப்படி தான் வசமாக மாட்டி போலீசிடம் அபராதம் கட்டியிருக்கிறார்கள். 24 மணிநேரத்தில் 13 ஆயிரம் வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனர் காவல்துறையினர். 

Trending News