இந்திய பங்குசந்தையில் பெரும் சரிவு! சென்செக்ஸ் 1,950 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது!

இந்திய பங்கு சந்தை இன்று காலை முதலே தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2022, 03:58 PM IST
  • சமீப ஆண்டுகளில் வளர்ச்சி பங்குகளில் ஏற்பட்ட பணப்புழக்கத்தினை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிஃப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் 3.37 சதவீதம் சரிந்ததால் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் எதிர்மறை மண்டலத்தில் இருந்தன,
இந்திய பங்குசந்தையில் பெரும் சரிவு! சென்செக்ஸ் 1,950 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது! title=

உலகளவில் பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பங்கு சந்தை இன்று காலை முதலே தொடர்ந்து சரிந்தன. முதலீட்டாளர்கள் பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்குத் தயாராகி வருவதால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. இது சமீப ஆண்டுகளில் வளர்ச்சி பங்குகளில் ஏற்பட்ட பணப்புழக்கத்தினை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 2:16 நிலவரப்படி, 30-பங்குகளின் பிஎஸ்இ சென்செக்ஸ் (BSE Sensex) பேக் 1,955 புள்ளிகள் அல்லது 3.31 சதவீதம் குறைந்து 57,082 ஆகவும்,  பிராடர் என்எஸ்இ நிஃப்டி (broader NSE Nifty) 596 புள்ளிகள் அல்லது 3.38 சதவீதம் சரிந்து 17,021 ஆகவும் இருந்தது.

ALSO READ | Sukanya Samriddhi Yojana: தினம் ₹416 முதலீட்டில் ₹65 லட்சம் அள்ளலாம்!

நிஃப்டி மிட்கேப் (Nifty Midcap) 100 இன்டெக்ஸ் 3.37 சதவீதம் சரிந்ததால் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் எதிர்மறை மண்டலத்தில் இருந்தன, மேலும் சிறிய கேப் பங்குகள் 4.20 சதவீதம் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டன.  "பலவீனமான உலகளாவிய பங்குகளை கண்காணிக்கும் இடைவெளியில் உள்ள  மாற்றங்களால், சந்தைகள் அவற்றின் மந்தமான போக்கைத் தொடர வாய்ப்புள்ளது" என்று கேபிடல்வியா குளோபல் ரிசர்ச் (Capitalvia Global Research) லிமிடெட்டின் ஆராய்ச்சித் தலைவர் கௌரவ் கர்க் கூறினார்.

பங்கு சந்தையில், பஜாஜ் ஃபைனான்ஸ் நிஃப்டியில் நஷ்டமடைந்தது. ஏனெனில் அதன் பங்கு 6.22 சதவீதம் சரிந்து ₹6,915 ஆக இருந்தது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (JSW Steel), டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களும் பின்தங்கியுள்ளன.  மேலும், Zomato மற்றும் Paytm பங்குகள் முறையே 18.48 சதவீதம் மற்றும் 5.64 சதவீதம் சரிந்து, பட்டியலிடப்பட்டதில் இருந்து மிகக் குறைந்த அளவை எட்டியது.

பிஎஸ்இயில்(BSE) 3,069 பங்குகள் சரிந்தும் 456 பங்குகள் முன்னேறியதால் ஒட்டுமொத்த சந்தை அகலம் பலவீனமாக இருந்தது. 30-பங்கு பிஎஸ்இ (BSE) தளத்தில், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக்எம், டாடா ஸ்டீல், விப்ரோ, டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அவற்றின் பங்குகள் 2.83 சதவீதம் வரை சரிந்து அதிக நஷ்டத்தை அடைந்துள்ளன. கடந்த வெள்ளியன்று, சென்செக்ஸ் 427 புள்ளிகள் அல்லது 0.72 சதவீதம் சரிந்து 59,037 ஆக இருந்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 140 புள்ளிகள் அல்லது 0.79 சதவீதம் குறைந்து 17,617 ஆக இருந்தது.

ALSO READ | Honey trap: ஹனிட்ராப் மோசடியில் சிக்கிய ஜோதிடர்! 49 லட்சம் பறிகொடுத்த சோகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News